வழக்கு விவரம்: டிஜிபிக்கு ஜெயலட்சுமி கடிதம்
மதுரை:
தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விபரங்களைக் கேட்டு தமிழக போலீஸ் டிஜிபிக்கு ஜெயலட்சுமிகடிதம் எழுதி உள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறிய ஜெயலட்சுமி தனது வழக்கறிஞர்கள் மூலம் தமிழகபோலீஸ் டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து அவரது வழக்கறிஞர் அழகர்சாமி கூறியதாவது:
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் என் வாழ்க்கையை சீரழித்த போலீஸ் அதிகாரிகள் மீது புகார் கூறி இருந்தேன்.அதனையடுத்து என் மீது சில காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எந்த வழக்கையும் சந்திக்க நான் தயாராகவே உள்ளேன். எனவே எந்தெந்த காவல் நிலையங்களில் என் மீதுவழக்குகள் போடப்பட்டுள்ளன என்ற விவரத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன் என்று கடிதத்தில்ஜெயலட்சுமி கூறியிருக்கிறார்.
இந்த விவரத்தை டிஜிபி தெரிவிக்க விட்டால், ஜெயலட்சுமி மீதான ஹேபியஸ் கார்பஸ் மனு விசாரணைக்கு வரும்நாளில் அவர் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்ற விவரத்தை டிஜிபி தெரிவிக்க வேண்டும் என்று கோரிமதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்வோம் என்றார் அழகர்சாமி.
கட்ட பஞ்சாயத்து:
இந்த ஜெயலட்சுமி போலீஸ் உதவியுடன் பல கட்டப் பஞ்சாயத்துகளையும் நடத்தியுள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
இவருடன் குடும்பம் நடத்திய இன்ஸ்பெக்டர் மலைச்சாமியின் உறவுப் பையன் ஒருவன், தாலி கட்டிய கையோடு தனது மனைவியை விட்டுப்பிரிய அந்த விவகாரம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளது.
மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த அந்தப் பையனையும் மனைவியையும் சேர்த்து வைக்குமாறு மலைச்சாமி கேட்டுக் கொள்ள,குற்றப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து கட்டப் பஞ்சாயத்து பேசி இருவரையும் சேர்த்து வைத்துள்ளார் ஜெயலட்சுமி.
அதே போல மேலூரில் ஒருகாதல் ஜோடி விவகாரதம் காவல் நிலையத்துக்கு வர, அந்த விவகாரத்தை இவரிடம் திருப்பிவிட்டுள்ளது காவல்துறை. இதையடுத்து அதில் தலையிட்டு பஞ்சாயத்து மூலம் சேர்த்து வைத்துள்ளார்.
இப்படி தான் நடத்திய கட்டப் பஞ்சாயத்துகள் மூலம் பணமும் ஈட்டி, அதில் ஒரு பகுதியை சம்பந்தபட்ட காவல் நிலைய போலீசாருக்குகமிஷனாக வெட்டியுள்ளார் ஜெயலட்சுமி.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications