ரயில்வே திட்டங்கள்: தமிழகத்தில் லாலு 5 நாள் ஆய்வு
சென்னை:
சென்னை எழும்பூர்-தென்காசி இடையிலான சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 20ம் தேதிமுதல் இயங்கவுள்ளது. அதை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கொடியைத்து இயக்கிவைக்கிறார்.
சமீபத்தில் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த ரயில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 4.45 மணிக்கு தென்காசியைசென்றடையும்.
தென்காசியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குப் புறப்பட்டு திங்கள்கிழமை காலை 6.45மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர்,ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதில் 2 ஏசி பெட்டிகளும் இருக்கும். ராஜபாளையம்-தென்காசி இடையே அமைக்கப்பட்டுள்ளபுதிய அகல ரயில் பாதையில் இயக்கப்படவுள்ள முதல் சூப்பர் பாஸ்ட் ரயில் இது தான்.
16ம் தேதி தனது மனைவியும் பிகார் முதல்வருமான ராப்ரி தேவியுடன் தமிழகம் வரும் லாலு,தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்பட பல இடங்களுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ரயில் திட்டப் பணிகளைப் பார்வையிடவுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications