உமாபாரதி மீதான வழக்குகள் வாபஸ்- விடுதலை
ஹூப்ளி:
முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் உமா பாரதி மீதான கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறகர்நாடக அரசுக்கு ஹூப்ளி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவர் இன்றே விடுதலைசெய்யப்பட்டார்.
10 ஆண்டுகளுக்கு முன் ஹூப்ளியில் போலீஸ் தடையை மீறி ஈத்கா மைதானத்தில் உமா பாரதிதேசியக் கொடியேற்றியதையடுத்து நடந்த மதக் கலவரத்தில் 4 பேர் பலியாயின. இது தொடர்பாகஉமா மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டன.
இந்த வழக்குகளை வாபஸ் பெறுவது என கிருஷ்ணா தலைமையிலான முந்தைய கர்நாடக காங்கிரஸ்அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், அதை வாபஸ் பெறவில்லை.
இந் நிலையில் தரம்சிங் தலைமையிலான இப்போதைய காங்கிரஸ் அரசு, வழக்குகளை வாபஸ் பெறமாட்டோம் என அறிவித்தது.
இதற்கிடையே, இந் வழக்குகளில் ஹூப்ளி நீதிமன்றம் உமா பாரதியைக் கைது செய்ய வாரண்ட்பிறப்பித்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நீதிமன்றத்தில்ஆஜரான உமா பாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறைக்குப் பதிலாக தார்வாட் விவசாயக் கல்லூரியின் விருந்தினர் இல்லத்தில் அவர்வைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து பெங்களுரிலும் ஹூப்ளியும் பா.ஜ.க. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது.தினந்தோறும் மூத்த தலைவர்கள் தலைமையில் பெங்களூரில் சத்யாகிரகப் போராட்டம்நடத்தப்பட்டது. முன்னாள் துணைப் பிரதமர் அத்வானியில் ஆரம்பித்து, தினமும் மூத்த பா.ஜ.க.தலைவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டு வந்தனர்.
இந்தப் போராட்டங்களால் பெங்களூரில் பெரும் போக்குவரத்து பிரச்சனை ஏற்பட்டு வந்தது. அதேபோல ஹூப்ளியில் மதக் கலவர அபாயத்தால் கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு வந்தன.
இந் நிலையில் உமா பாரதி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஹூப்ளி நீதிமன்றத்தில்கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது. இதை ஏற்றுக் கொளவதாக இன்று நீதிமன்றம் அறிவித்தது.இதையடுத்து இன்றே உமா பாரதி விடுதலை செய்யப்பட்டார்.
முன்னதாக உமா பாரதியின் கைதை கண்டித்து தேசியக் கொடி யாத்திரை நடத்த பா.ஜ.க.திட்டமிட்டிருந்தது. அந்த யாத்திரை திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பெங்களூரில் நடத்தப்பட்டு வந்த சத்யாகிரகப் போராட்டம் வாபஸ் பெறப்படும் எனபா.ஜ.க. அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் (8ம் தேதி) பெங்களூரில் வெற்றிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதில் முன்னாள்பிரதமர் வாஜ்பாய்உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
முன்னதாக 8ம் தேதி வாஜ்பாயும் சத்யாகிரகப் போராட்டம் நடத்தி கைதாவது என்றுதிட்டமிட்டப்பட்டிருந்தது. இப்போது உமா பாரதி விடுவிக்கப்படுவதால் அதை வெற்றிப் பொதுக்கூட்டமாக பா.ஜ.க. நடத்துகிறது.
இதற்கிடையே உமாவின் கைதை கண்டித்து இன்று பெங்களூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர். பா.ஜ.க. தலைவர்களானஇல.கணேசன், திருநாவுக்கரசர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் அவர்கள்பெங்களூர் வந்தனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications