நியூயார்க்கில் முஷாரப்பை சந்திக்கிறார் மன்மோகன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நியூயார்க் செல்லவிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், அங்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கவுள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷீத் மெஹ்மூத் கஸூரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், இத்தகவலை வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் வருகிற 23-ம் தேதி மன்மோகன் சிங் உரையாற்றுகிறார். அதற்காக 19-ம்தேதி டெல்லியிலிருந்து கிளம்பும் மன்மோகன் சிங் வழியில் லண்டனில் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரைச்சந்தித்துப் பேசுகிறார்.
21-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்கிறார். அதற்கு அடுத்த நாள் பர்வேஸ் முஷாரப்புடன்பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தப் பயணத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications