திராவிட், பதானுக்கு ஐ.சி.சி. ஆஸ்கார் விருது

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுகளைராகுல் திராவிட்டும், சிறந்த அறிமுக வீரர் விருதினை இர்பான் பதானும் பெற்றனர்.

லண்டன் அலெக்ஸாண்டிரா அரண்மனையில் ஐ.சி.சி. கிரிக்கெட் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை நடந்த போட்டிகளில் சிறப்பாகஆடியவர்கள் விருதுக்காக பரிசீலிக்கப்பட்டார்கள்.

9 டெஸ்ட் போட்டிகளில் 1,241 ரன்களைக் குவித்த திராவிட் சிறந்த டெஸ்ட் வீரர் விருதைப் பெறத்தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது டெஸ்ட் ஆவரேஜ் 95.46 ஆகும். டெஸ்ட் போட்டிகளைப் போல் ஒரு நாள்போட்டிகளிலும் இவர் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தால், ஆண்டின் சிறந்த கிரிக்கெட் விருதுக்கும் இவரேதேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டு விருதுகளையும் பெற்ற பின்பு பேசிய திராவிட், இது நம்பமுடியாத உண்மை என்று தனது அதிர்ச்சி கலந்தமகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் விருதை இங்கிலாந்து நாட்டின் ஆண்ட்ரூ பிளிண்டாப் பெற்றார்.

5 டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் இர்பான் பதான் சிறந்த அறிமுக வீரர் விருதைப்பெற்றார்.

சிறந்த அம்ப்யர் விருதை ஆஸ்திரேலியாவின் சைமன் டஃபெல் பெற்றார். டீம் ஸ்பிரிட்டுடன் விளையாடும்அணியாக நியூசிலாந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு விருது வழங்கப்பட்டது.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தொடச்சியாக வெற்றிகளைக் குவித்து வரும் ஆஸ்திரேலியாஅணியிலிருந்து ஒருவர் கூட விருதுக்குத் தகுதி பெறவில்லை.

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற இந்தியா சார்பில் திராவிட் மட்டுமே தகுதி பெற்றார்.அதேநேரத்தில் ஒரு நாள் கிரிக்கெட் அணியில் டெண்டுல்கரும், சேவாக்கும் இடம்பெற்றனர். இரு அணிகளுக்கும்கேப்டன் பொறுப்பை வகிக்க ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+