முஸ்லீம்கள் 36%, இந்துக்கள் 20.3 %

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

1991-2001க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள் தொகைபெருக்கம் 36 சதவீதமும், இந்துக்களின் மக்கள் தொகை பெருக்கம் 20.3 சதவீதமாகவும் இருப்பதாகமத்திய கணக்கெடுப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளுக்கு முன் 34.5 சதவீதமாகஇருந்ததாகவும், இந்துக்கள் மக்கள் தொகை வளர்ச்சி 24.8 சதவீதாக இருந்ததாகவும் சென்சஸ்ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

மத அடிப்படையில் மக்கள் தொகை குறித்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ள முதல் சென்சஸ்அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

2001ம் ஆண்டு வரையிலான இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1,027,015,247 என்றும், கடந்த10 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 21.34 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும்தெரிவித்துள்ளது.

நாட்டில் பெண்களின் எண்ணிக்கை 1000 ஆண்களுக்கு 933 என்ற விகிதத்தில் இருப்பதாகவும்கூறியுள்ளது.

கல்வியறிவு பெற்ற இந்தியர்களின் விகிதம் 65.38 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது. ஆண்கள்75.85 சதவீதமும், பெண்கள் 54.16 சதவீதமும் கல்வியறிவு பெற்றவர்கள்.

தமிழகம்:

தமிழகத்தின் மக்கள் தொகை 62,110,839. இதில் ஆண்கள் 31,268,654 பேர். பெண்கள் 30,842,185.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மக்கள் தொகை பெருக்கம் 11.19 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது தேசிய அளவில் உள்ள மக்கள் தொகை பெருக்கத்தில் பாதியளவே ஆகும்.

தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 986 பெண்கள் உள்ளனர். இது தேசிய விகிதமான 933யை விடஅதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+