ஆளுநருடன் அமைச்சர்கள் குரூப் போட்டோ ரத்து
சென்னை:
ஆளுநர் ராம்மோகன் ராவுடன் தமிழக அமைச்சரவை புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
மாநிலத்தில் புதிதாக அமைச்சரவை பொறுப்பேற்கும்போதும், அமைச்சரவை மாற்றத்தின் போதும், ஆளுநர், முதல்வர் மற்றும் அனைத்துஅமைச்சர்களும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து கொள்வது வாடிக்கையாகும். கடந்த மாதம் 27ம் தேதி அமைச்சரவையில் பொள்ளாச்சிஜெயராமனும், விஜயலட்சுமி பழனிச்சாமியும் புதிதாக சேர்க்கப்பட்டபோது, அமைச்சரவை குழு புகைப்படம் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையில் அமைச்சரவை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காகஅனைத்து அமைச்சர்களுக்கும் தகவல் தரப்பட்டது.
ஆனால், திடீரென்று இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. ஏன் ரத்து செய்யப்பட்டது என்ற காரணம் வெளியிடப்படவில்லை. நாள்சரியில்லை என்பதால் வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் வரலாம். அதன்பொருட்டுதான் புகைப்படம் எடுப்பது தள்ளிப் போடப்பட்டிருக்கிறதுஎன்றும் கூறப்படுகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications