ஏ.ஆர். ரஹ்மான் மீதான வழக்கு தள்ளுபடி
சென்னை:
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ரஹ்மானுக்கு எதிராக சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பெரியசாமி காளையப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
1998-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை நான் செய்தேன். அதில் எனக்கு கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது.
அந்த இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய கேசட்டுகளை விற்கும் உரிமை எனக்குத்தான் உள்ளது.ஆனால் அவற்றை ரஹ்மான் விற்று வருகிறார். இதை எதிர்த்து நான் வழக்கு தொடர்ந்ததையடுத்து அந்த ஆடியோகேசட்டுகளை விற்க ரஹ்மானுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதன் பின்னரும் ரஹ்மான் கேசட்டுகளை விற்று வருகிறார். இது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும். எனவேரஹ்மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த ரஹ்மான் அதில் கூறியிருப்பதாவது:
துபாயில் இசை நிகழ்ச்சி நடத்த எனக்கு ரூ.90 லட்சம் தர பெரியசாமி ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் ரூ.60லட்சம் மட்டுமே கொடுத்தார். மீதிப் பணத்தைத் தரவில்லை.
எனது இசை நிகழ்ச்சியின் ஆடியோ கேசட்டுகளை விற்கும் உரிமை என்னிடமே உள்ளது. அதனால்தான் அவற்றைவிற்றேன். அப்போது அது குறித்து பெரியசாமி காளையப்பன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மீண்டும் துபாயில் இசை நிகழ்ச்சி நடத்த அவர் என்னை அணுகிய போது நான் சம்மதிக்கவில்லை. இதனால் என்மீது இப்போது வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
1998-ம் ஆண்டு துபாய் நிகழ்ச்சிக்கு ஏராளமான டிக்கட்டுகளை அவர் விற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியை யுடிவியில்ஒளிபரப்ப அவர் ரூ.75 லட்சம் வாங்கியிருக்கிறார். இந் நிலையில் நஷ்டம் அடைந்துவிட்டதாக அவர் கூறுவதுஉண்மையல்ல.
எனவே என் மீது அவர் தாக்கல் செய்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.ரஹ்மானின் மனுவை பரிசீலித்த நீதிபதி ரவிராஜபாண்டியன் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications