என் வாழ்நாள் சாதனையே சேது திட்டம்: வைகோ

Subscribe to Oneindia Tamil

ஆற்காடு - நாகப்பட்டினம்:

Vaikoசேது சமுத்திரத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது எனது வாழ்நாள் சாதனையாகும் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

நடைப்பயணத்தின் 35ம் நாளான இன்று ஆற்காடு வந்த வைகோ அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

சேது சமுத்திரத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது எனது வாழ்நாள் சாதனையாகும். இதைஎனது வாழ்நாளில் என்றைக்கும் மறக்க முடியாது.

இத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2,000 கோடி ஒதுக்கியுள்ளது. அதற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான்நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பாதியில் நின்ற கூட்டம்:

இந் நிலையில், சேது சமுத்திரத் திட்டத்துக்கு நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினத்தில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் குறித்த பொதுமக்கள் கருத்தறியும் கூட்டம் மாவட்ட ஆட்சியர்வீரசண்முகமணி தலைமையில் நடந்ததது. கூட்டத்தில் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு அமைப்பாளர்ஜேசுரத்தினம் பேசியதாவது:

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் என்ற பெயரில் ரூ.2,000 கோடி செலவு செய்து பவளப் பாறைகள் நிறைந்தகடலின் தேசிய உயிரியல் பூங்காவை அழிக்க முயற்சிப்பது வேதனைக்குரியது. இத்திட்டத்தால் கிடைக்கும்லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு, இழப்புகளை கவனிக்கத் தவறி விட்டனர் என்றார்.

தமிழ்நாடு மீனவர் பேரவை துணைத்தலைவர் பி.இராஜேந்திரன் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தால் 10,500சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள 21 தீவுகள், 623 ஹெக்டேரில் அமைந்துள்ள 127 வகை பவளப் பாறைகள்மற்றும் 3,600 வகை தாவர உயிரினங்கள் அழிந்து போக நேரிடும் என்றார்.

இவ்வாறு மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் பேசிய அனைவரும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராகப் பேசினர்.இதனையடுத்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

திட்டத்தை முடக்க சதி: ராமதாஸ்

இதற்கிடையே சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க திரைமறைவில் சதி நடப்பதாக பாமக நிறுவனம் ராமதாஸ்சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2,000 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட இருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினால் தென் மாவட்டங்களில்தொழில் வளர்ச்சி பெருகும். ஏராளமானோர்க்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தசேது சமுத்திர திட்டத்தை முடக்க திரைமறைவில் சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற கருத்தாய்வுக் கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோருக்குமட்டும் பேச வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு தூத்துக்குடி துறைமுகத் தலைவர் விளக்கம்அளிப்பதற்கு வாய்ப்பு அளிக்காமல் கூட்டத்தை பாதியிலேயே நாகை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்துள்ளார்.

இவ்வாறு செயல்படும்படி அவர் மாநில அரசால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். எனவே இதுகுறித்து மத்திய அரசுவிசாரிக்க வேண்டும்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே சேதுசமுத்திர திட்டத்தை முடக்கிப் போட இலங்கை அரசு முயற்சி மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்க நினைப்பவர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுவோர் என்றுதான் தமிழகமக்களால் கருதப்படுவார்கள்.

நாகை ஆட்சியரின் நடவடிக்கையில் மாநில அரசுக்கு சம்பந்தமில்லை என்றால் அதனை அரசு விளக்க வேண்டும்.அத்துடன் தன்னிச்சையாக இவ்வாறு செயல்பட்டது ஏன் என்பது குறித்து அவரிடம் மாநில அரசு விசாரணை நடத்தவேண்டும். இல்லாவிட்டால் மாநில அரசு மீதுதான் மக்களுக்கு சந்தேகம் வரும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+