பேய் ஓட்ட சூடு- காலை இழந்த பெண்
திருநெல்வேலி:
பேய் பிடித்து விட்டதாகக் கூறி பெண்ணின் இடது காலில் பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு போட்டதால், அந்தப்பெண் தனது இடது காலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலைக்கு ஆளானார்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜான் டேவிட். இவரது மனைவி ஜெயா. 26 வயதாகும் ஜெயா 4 மாதங்களுக்குமுன்பு குழந்தை பெற்றார். கர்ப்பிணியாக இருந்தபோது அவரது இடது காலில் வீக்கம் ஏற்பட்டது. பிரசவகாலத்தின்போது ஏற்படும் வீக்கம் என ஜெயாவின் குடும்பத்தினர் முதலில் நினைத்தனர்.
குழந்தை பெற்ற பிறகும் வீக்கம் குறையாததால், அவர்கள் குழப்பமடைந்தனர். மூட நம்பிக்கை அதிகம் கொண்டஜெயாவின் கணவர் குடும்பத்தார், ஏதோ காற்று, கருப்பு ஜெயாவைப் பிடித்துள்ளது என்ற முடிவுக்கு வந்தனர்.
இதையடுத்து ஜெயாவை அழைத்துக் கொண்டு கல்லிடைக்குறிச்சிக்கு சென்றனர். அங்கு லட்சுமணன் என்ற நாட்டுவைத்தியரிடம் ஜெயாவைக் காட்டி அவரைப் பிடித்துள்ள பேயை விரட்டுமாறு கோரினர்.
வைத்தியம் பார்ப்பதற்காக கூட்டிச் செல்வதாக தன்னிடம் மாமியார் உள்ளிட்டோர் தெரிவித்து விட்டு இப்போதுபேய் ஓட்டும் இடத்திற்குக் கூட்டி வந்திருப்பதை அறிந்த ஜெயா லட்சுமணனிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளமறுத்துக் கதறியுள்ளார்.
ஆனால் லட்சுமணன் உத்தரவுப்படி, மாமானார், நாத்தனார், கணவர் உள்ளிட்டோர் ஜெயாவை இறுக்கப் பிடித்துக்கொண்டனர். பின்னர் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால், ஜெயாவின் வீக்கமடைந்த காலில் சூடுபோட்டுள்ளார் லட்சுமணன்.
ஏற்கனவே வீக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த இடது கால் இரும்புக் கம்பியால் சூடு போட்டதற்குப் பிறகு மேலும்வீக்கமடைந்து, சீழ் பிடித்துக் கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் ஜெயா கதறி அழுதார். இதையடுத்துஜெயாவை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி வந்த டேவிட் அவரை அங்குள்ள ஒரு சர்ச்சில் விட்டு விட்டுச்சென்று விட்டார்.
சர்ச்சில் இருந்தவர்கள், ஜெயாவின் நிலையைப் பார்த்து பரிதாபமடைந்து அவரை அரசு பொது மருத்துவமனையில்கொண்டு சேர்த்தனர். காலின் நிலை மோசமடைந்து இருந்ததால் அதை அறுவைச் சிகிச்சை மூலம் துண்டித்து விடடாக்டர்கள் முடிவு செய்து காலை எடுத்து விட்டனர்.
தனது கணவர் வீட்டாரின் செயலால் பாதிக்கப்பட்ட ஜெயா இதுகுறித்து கல்லிடைக் குறிச்சி போலீஸில் புகார்கொடுத்தார். இதையடுத்து ஜெயாவின் கணவர் டேவிட், மாமியார் அன்னத்தாய், நாத்தனார் மேரி, மாமாயோசோப், நாட்டு வைத்தியர் லட்சுமணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications