ஆஸ்திரேலிய குடியுரிமை: சிக்கலில் இந்திய சிறுமி
கேன்பெர்ரா:
அகதிகளாக வந்த இந்திய தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கமுடியாது என அந் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மில்கித் சிங்- சரப்ஜீத் தம்பதி தங்களது 10 வயது மகன் நவ்ஜோத் உடன்1997ம் ஆண்டு ஏப்ரலில் ஆஸ்திரேலியா வந்தனர். அந்த நாட்டு குடியுரிமை கோரிவிண்ணப்பித்தனர். அப்போது சரப்ஜீத் கர்ப்பமாக இருந்தார்.
ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்படாத நிலையில் விக்டோரியா மாகாணத்தில் மில்துராவில்வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு 1998ம் ஆண்டு பிப்ரவரியில் தனியா என்றபெண் குழந்தை பிறந்தது. ஆனால், அக் குழந்தைக்கு ஆஸ்திரேலிய குடியுரிமைமறுக்கப்பட்டுவிட்டது.
மேலும் இப்போது 6 வயதான தனியாவும் அவரது குடும்பத்தினரும் 28 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து சிங் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆஸ்திரேலியாவில் பிறந்த குழந்தையைஅன்னிய நாட்டுக்கு (இந்தியா) விரட்டியடிப்பது தவறு என்று சிங்கின் வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால், 7 நீதிபதிகள் கொண்ட ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. இதில் 5நீதிபதிகள், அகதிகளாக வந்தவர்களுக்குப் பிறந்த குழந்தைக்குக் குடியுரிமை வழங்கப்படாது என்றுதீர்ப்பளித்தனர்.
மற்ற இரு நீதிபதிகளும் இதை ஏற்கவில்லை. குழந்தைக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கலாம்என்றனர். ஆனால், மெஜாரிட்டி நீதிபதிகளின் தீர்ப்புப்படி தனியாவுக்கு குடியுரிமைமறுக்கப்பட்டுவிட்டது.
இதில் தலையிடுமாறு ஆஸ்திரேலிய குடியுரிமைத்துறை அமைச்சர் அமன்டா வான்ஸ்டோனிடம்முறையிடப் போவதாக சிங்கின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
1986ம் ஆண்டுக்கு முன் ஆஸ்திரேயாவில் பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் குடியுரிமைவழங்கப்பட்டு வந்தது.
ஆனால், அந்த ஆண்டில் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டது. அதன்படி, சட்டவிரோதமாககுடியேறுவோர், குடியுரிமை மறுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும்குடியுரிமை கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வரும் அக்டோபர் 9ம்தேதி நடக்கவுள்ள தேர்தலிலும் இந்த விவகாரமே முக்கிய பிரச்சார ஆயுதமாக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications