2 குழந்தைக்கு மேல் இருந்தால்..
சென்னை:
தமிழகத்தில் நடைபெறும் ஊராட்சித் தேர்தல்களில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி, அரியானா மாநிலத்தில் ஊராட்சி தேர்தலில் 2 குழந்தைகளுக்குமேல் உள்ளவர்கள் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மகாராஷ்டிரா உள்ளிட்ட சிலமாநிலங்களில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தடையை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். அதையும் செப்டம்பர் 27ம் தேதி நடக்கவுள்ளஊராட்சி மன்றத் தேர்தலிலேயே அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய தலித் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட சுமார் 1,000 ஊராட்சி மன்றக் காலியிடங்களுக்குசெப்டம்பர் 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துக்களில் வெற்றி பெறும் தலித் தலைவர்கள் தேர்தல் முடிந்தவுடனேயேபதவியை ராஜினாமா செய்வது தொடர் கதையாகியுள்ளது. எனவே, தேர்தலில் வெற்றி பெற்றவர் உடனடியாகராஜினாமா செய்தால் தேர்தலுக்கான செலவை அவரிடமிருந்தே வசூலிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதுஎன்றார் பழனிச்சாமி.
பாப்பாபட்டியிலும் கீரிப்பட்டியிலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் மிரட்டலால் தான் தலித்துகள் உயிருக்கு அஞ்சிபதவியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியிடுவதே உயிருக்கு ஆபத்து என்ற நிலைஉள்ளது.
தங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்காக தேர்தலில் நின்று வென்று, பின்னர் உயிருக்கும், பிற தலித்களின்பிழைப்புக்கும் பங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக பஞ்சாயத்துத் தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.
அதற்கு ஒரு தீர்வைக் காணாமல் அவர்களை தேர்தல் கமிஷன் நெருக்குவது சரி என்று தோன்றவில்லை.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications