கிரிக்கெட் ஒளிப்பரப்பு: மறு டெண்டர் விட உத்தரவு
மும்பை & லண்டன்:
கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைக்கு மறு டெண்டர் விடுமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மும்பைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோர் 2004 முதல் செப்டம்பர் 2008 வரை இந்தியாவில் நடைபெறும் தேசிய, சர்வேதேச கிரிக்கெட்போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெற "ஜீ டிவி நிறுவனம் ரூ.1,200 கோடி ரூபாயையும்,ஈ.எஸ்.பி.என்-ஸ்டார் "டிவி நிறுவனம் 1,060 கோடி ரூபாயையும் தர முன்வந்தன. ஆனால் இந்திய கிரிக்கெட்வாரியம் ஒளிபரப்பு உரிமையை வாங்க ரூ.1,500 கோடி ரூபாயை நிர்ணயித்தது.
இதை இரு டிவி நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டன. இருப்பினும் ஒப்பந்தப் படிவத்தில் ஜீ டிவி அதிக தொகைகுறிப்பிட்டிருந்ததால், அதற்கே முன்னுரிமை அளித்து ஒளிபரப்பு உரிமை வழங்கப் போவதாக கிரிக்கெட் வாரியத்தலைவர் ஜக் மோகன் டால்மியா அறிவித்தார்.
இந்த முடிவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஈ.எஸ்.பி.என்- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.எஸ்.பண்டாரி தலைமையிலான பெஞ்ச்,
கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை விற்க இந்திய கிரிக்கெட் வாரியம் புதிதாக விலை கோர வேண்டும் என்றும்,அதில் யார் அதிக தொகை கேட்கிறார்களோ அவர்களுக்கே உரிமை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியது.
மினி உலக கோப்பை:
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐ.சி.சி. சாம்பியன் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.
இதில் 12 நாடுகள் பங்கேற்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா அணிகளும், பிபிரிவில் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வங்காள தேசம் அணிகளும், சி பிரிவில் இந்தியா,பாகிஸ்தான், கென்யா அணிகளும், டி பிரிவில் இலங்கை, இங்கிலாந்து, ஜிம்பாப்வே அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி, மற்ற இரு அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் இடத்தைபிடிக்கும் அணி அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.
போட்டிகள் நாளை தொடங்கி 25ம் தேதி வரை நடக்கின்றன. நாளை இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒருஆட்டத்தில் இங்கிலாந்து ஜிம்பாப்வேயுடனும், மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அமெரிக்காவுடனும்மோதுகின்றன. அமெரிக்கா முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்தியா வரும் 11ம் தேதி கென்யாவையும், 19ம் தேதி பாகிஸ்தானையும் எதிர்த்து விளையாடுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாகரோஹன் கவாஸ்கர் விளையாடுகிறார்.
மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் போட்டி முதன் முறையாக 1998-ம் ஆண்டுடாக்காவில் நடந்ததது. இதில் தென் ஆப்பிரிக்கா பட்டம் வென்றது. 2000-ம் ஆண்டு நைரோபியில் நடந்த 2-வதுபோட்டியில் நியூசிலாந்தும், 2002-ம் ஆண்டு கொழும்பில் நடந்த போட்டியில் இந்தியாவும், இலங்கையும்இணைந்தும் கோப்பையைக் கைப்பற்றியன.












Click it and Unblock the Notifications