சாலை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை
சென்னை:
பணிநீக்கம் செய்யப்பட்ட 9,800 சாலைப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட சாலைப் பணியாளர்களை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகஅரசு பணியிலிருந்து நீக்கியது. இதை எதிர்த்து சாலைப் பணியாளர்கள் பல்வேறு வகையான போராட்டத்தில்ஈடுபட்டனர்.
பின்னர் மாநில தீர்ப்பாணையத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அங்கு அவர்களுக்கு 6 மாதத்திற்கான சம்பளத்தைக்கொடுக்குமாறு தீர்ப்பாணையம் அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் பணியில் சேர்க்குமாறு அரசுக்கு உத்தரவிடமுடியாது என்று தீர்ப்பாணையம் கூறிவிட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்தமனுவை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தனது தீர்ப்பைவழங்கியது.
தொழிலாளர் தாவா சட்டத்தை முற்றிலும் மீறும் விதமாக இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 9,813சாலைப் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் தமிழக அரசின் கடந்த 2002மாவது ஆண்டு செப்டம்பர் 5ம் தேதிஉத்தரவை நீதிமன்றம் ரத்து செய்கிறது.
அரசின் உத்தரவு முற்றும் சட்டவிரோதமானது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசுசெயல்பட வேண்டும். நல்லதொரு வேலை வாய்ப்பு நிறுவனமாக அது விளங்க வேண்டும்.
பணி நீக்கம் செய்யப்பட்ட 9,813 சாலைப் பணியாளர்களுக்கும் 6 மாத சம்பளத்தை வழங்குவதோடு, அவர்களை 3மாதங்களுக்குள் மீண்டும் வேலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களதுஉத்தரவில் கூறியுள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications