ஜகார்தா: ஆஸி. தூதரகம் அருகே குண்டு வெடிப்பு
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் ஆஸ்திரேலிய தூதரகத்துக்கு அருகே மிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 7பேர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.
இது தங்கள் நாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என ஆஸ்திரேலியா கருத்துதெரிவித்துள்ளது.
இன்று காலை இச் சம்பவம் நடந்தது. தூதரகத்தின் தடுப்புச் சுவரும் கார்களும் பெரும்சேதமடைந்துள்ளன. அப் பகுதியில் உள்ள பெரிய கட்டடங்களின் கண்ணாடிகளும் சிதறின.
இதில் தூதரக ஊழியர் யாரும் காயமடையவில்லை என ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின்டால் சேக்ஸ், கேன்பெர்ராவில் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பில் தூதரகத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் பாதுகாப்பு கருதிஊழியர்கள் அனைவரும் வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
இதற்கிடையே அடிலைடில் நிருபர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்அலெக்ஸான்டர் டோவர், இது எங்கள் நாட்டுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதல்தான்.
இந்தோனேஷியாவில் இயங்கும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமியா இஸ்லாமியாதீவிரவாத அமைப்பு தான் இத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்றார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹாவர்ட், இந்தோனேஷியாவில் நடத்தப்பட்டது கார் வெடிகுண்டுத்தாக்குதல் என்றார். இது தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என இந்தோனேஷியாகூறியுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications