தனியார்துறையில் இட ஒதுக்கீடு: பாஸ்வான் தீவிரம்
சென்னை:
தனியார் துறையில் தலித்கள், பிற்படுத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதை யாராலும் தடுக்கமுடியாது என மத்திய உரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.
பா.ம.க. சார்பில் இட ஒதுக்கீடு குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பாஸ்வான கூறியதாவது:
அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கிறோம். இந் நிலையில்தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு என்பது அத்தியாவசியமாகிறது.
இதனை நிச்சயம் அமலாக்குவோம். அதை யாராலும் தடுக்க முடியாது. ஏதோபிற்படுத்தப்பட்டவர்களும் தலித்களும் திறமை இல்லாதவர்கள் போலவும், அவர்கள் உயர்பதவிகளுக்கு வந்தால் நிறுவனங்கள் சரியாக செயல்பட முடியாது என்பது போலவும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அரசு நிலத்தை ஒதுக்குவது, வங்கிக் கடன் மாதிரி வேலை வாய்ப்பிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்குமுக்கியத்துவம் கொடுக்கப்படத் தான் வேண்டும்.
இதை முதலில் எனது உரத்துறையிலேயே அமலாக்கிவிட்டேன். அரசின் உர விற்பனை டீலர்களாக5,000 தலித்களும், 27 சதவீத பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் நியமிக்கப்படவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அதை அமலாக்குவதை யாராவது தடுக்கட்டும், பார்க்கிறேன். தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்,சிறுபான்மையினர் இணைந்து தங்களது உரிமைகளுக்காகப் போராட வேண்டும்.
தனியார் நிறுவனங்களின் போர்ட் ஆப் டைரக்டர்களை நியமிக்கும்போது தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கச் செய்ய வேண்டும்.
தனியார்துறையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேசிய ஆய்வுக்கமிட்டியில் நான் இருக்கிறேன். இந்த விஷயத்தில் நான் அதிக அக்கறை காட்டி வருகிறேன் என்றார்.
ராமதாஸ் பேச்சு:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
நீண்ட காலமாகவே இந்தியப் பொருளாதாரமும், தொழில்துறையும் சமூக நீதிக்கு எதிரானகூட்டத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு திறமைகிடையாது என்று கூறிக் கொண்டு இந்தக் கும்பல் தான் 50 ஆண்டுகளாய் அதிகாரத்தில் இருந்துவருகிறது.
இவர்களால் இந்தியா முன்னேறிவிட்டதா?. ஐ.நாவின் பட்டியலில் இலங்கை, மாலத்தீவுகளுக்குப்பின்னால் 127வது இடத்தில் தான் இருக்கிறது இந்தியா.
தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினரின் உழைப்பை கொஞ்சம் பயன்படுத்தினாலே போதும், நாடுஉருப்பட்டுவிடும். 90 சதவீதமாக உள்ள பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினரை இனியாரும் ஏமாற்ற முடியாது. இது எங்கள் நாடு.
நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்கள் பங்கை கேட்கிறோம். பிறப்புரிமையைக் கேட்கிறோம்என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications