சேது திட்டம்: உரிமை கொண்டாடும் பாஜக, காங்.
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆரம்பித்து தமிழகத்தில் கொடியும் கட்சியும் வைத்திருக்கும்அனைவரும் உரிமை கோரும் நிலையில் அதற்குக் காரணமே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தான் என்று பா.ஜ.க.தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
அதே போல இத் திட்டம் வரக் காரணமே காங்கிரஸ் கட்சி தான் என்று அக் கட்சியின் சட்டமன்றத் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரவுள்ள நிலையில் அந்த நடுவர் மன்றத்தையே கலைக்க வேண்டும்என்று கர்நாடக அரசு கோரியுள்ளது நியாயமற்றது.
இந்தப் பிரச்சினையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களும் பிரதமருக்குக் கோரிக்கை மனுஅனுப்ப வேண்டும். தேவைப்பட்டால் முதல்வர் ஜெயலலிதா தனது தலைமையில், அனைத்துக் கட்சித்தலைவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முறையிடவேண்டும்.
அப்படிக் கூப்பிட்டால் நானும் செல்லத் தயார். டெல்லியில் தற்போது செல்வாக்குடன் திகழும் திமுக தலைவர்கருணாநிதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடகத்தின் முயற்சிக்கு முட்டுக் கட்டை போட வேண்டும்.
சேது சமுத்திரத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 2,000 கோடி ஒதுக்கியுள்ளது. அதற்கு அஸ்திவாரம் போட்டதேவாஜ்பாய் தான். ஆனால், தாங்களால் தான் இத் திட்டம் வந்ததால மற்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.150 ஆண்டு காலத் திட்டத்துக்கு உயிர் கொடுத்தவர் வாஜ்பாய்.
நான் கப்பல்துறை அமைச்சராக இருந்தபோது திட்டத்தை விரைவுபடுத்த முயறி எடுத்தேன். இதனால் அணில்போல் எனக்கும் இதில் பங்குண்டு என்றார்.
எஸ்.ஆர்.பி. அறிக்கை:
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1996ல் ஐக்கிய முன்னணி ஆட்சியில் தான் இத் திட்டமே முதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர்ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. இந்தத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டது. உதட்டளவில் மட்டும்ஆதரவு தெரிவித்துவிட்டு திட்ட பைல்களை பரணில் தூக்கிப் போட்டார்கள்.
இப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தான் இத் திட்டம் நிறைவேற ரூ. 2,000 கோடிபணமும் ஒதுக்கி, சேது சமுத்திரக் கழகத்தையும் உருவாக்க முன் வந்துள்ளது. இதற்கு பிரதமர்மன்மோகன் சிங்குக்கு நன்றி சொல்ல தமிழகம் கடமைப்பட்டுள்ளது.
இதனால் இத் திட்டத்துக்கு உரிமை கொண்டாடும் தகுதி காங்கிரசுக்கும், எங்களுடன் கூட்டணியில்இருக்கும் கட்சிகளுக்கும் மட்டுமே உண்டு. வேறு யாருக்கும் உரிமையில்லை என்று கூறியுள்ளார்.
அப்படி போடுங்க!
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications