மீண்டும் தலை காட்டிய வீரப்பன்
கொள்ளேகால்:
தன்னைப் பற்றி தகவல் கொடுத்த 6 பேர் தலையை வெட்டிக் கொலை செய்வேன் என்று சந்தனக் கடத்தல் வீரப்பன்கூறியிருக்கிறான்.
வீரப்பனின் சொந்த ஊர் கோபிநத்தம் ஆகும். கோபிநத்தம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன், சேகர், ரவி ஆகியோர்காட்டுக்குள் வேட்டைக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது கும்பலாக வந்த சிலரை அவர்களது நாய்கள் துரத்தின.
நாய்களின் பின்னால் சென்ற 3 பேரும் அங்கு வீரப்பனும் அவனது கோஷ்டியினரும் இருப்பதைப் பார்த்துஅதிர்ச்சியில் உறைந்தனர். வீரப்பனிடம், நாங்கள் போலீஸ் உளவாளிகள் அல்ல, வேட்டைக்காக காட்டுக்குவந்தோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். அவர்கள் வார்த்தையில் உண்மை இருப்பதை தெரிந்து கொண்டவீரப்பன், அவர்களை உட்கார வைத்து சந்தோஷமாக பேசியுள்ளான்.
அப்போது அவர்களிடம் வீரப்பன், எனது சொந்த ஊரிலே உள்ள மாதையா என்ற நல்லூர் மாதையா, நந்தகோபால், சின்னகோபாலன், கிருஷ்ணன், பூபாலன், கர்ணன் ஆகிய 6 பேர் என்னைப் பற்றியும், என் கூட்டத்தைப்பற்றியும் போலீசுக்கு தகவல் கொடுப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் தலைகளை வெட்டாமல் விட மாட்டேன்என்று கூறியுள்ளான்.
பின்னர் வேட்டைக்கு வந்த ஒவ்வொருவருக்கும் தலா 500 ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்துள்ளான்.
இந்த விவரங்களை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், நண்பர்களிடம் அவர்கள் கூறியுள்ளனர். இது அதிரடிப்படைபோலீஸாருக்குத் தெரிந்து அவர்கள் அந்த 3 பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.
வீரப்பன் எச்சரிக்கை 6 பேர்களில் ஒருவரான மாதையா ஏற்கனவே போலீஸில் சரண் அடைந்து அவர்களின்பாதுகாப்பில் மாதேஸ்வரன் மலையில் இருக்கிறார்.மீதி இருக்கும் 5 பேருக்கு பாதுகாப்பு கொடுக்கவும், அவர்களைதேடி வீரப்பன் வந்தால் அவனைப் பிடிக்கவும் அதிரடிப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கடைசியாக கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திக் கொலை செய்ததோடு வீரப்பன்வேறு எந்த கடத்தல், கொலையிலும் இதுவரை ஈடுபடவில்லை. காட்டுப் பகுதியிலேயே பதுங்கிஇருக்கும் அவனை இரு மாநில அதிரடிப்படையினரும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications