சேது சமுத்திர திட்டத்திற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு
சென்னை:
சேது சமுத்திர திட்டத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிகூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேது சமுத்திர திட்டம் சுற்றுச் சூழலை கடுமையாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ராமேஸ்வரத்திற்கும், தூத்துக்குடிக்கும் இடையே உள்ள 23 சிறிய தீவுகளில் பவளப் பாறைகள் ஏராளமாக உள்ளன.இந்த பவளப்பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் உதவுபவை.
சேது சமுத்திரத் திட்டத்தின் பூர்வாங்கப் பணியான கடலை தூர்வாரி ஆழப்படுத்தும்போது இந்த பவளப் பாறைகள்அழித்துவிடும். இதனால் ராமேஸ்வரம் தொடங்கி நாகப்பட்டினம் வரை உள்ள 5 லட்சம் மீனவர்களின் எதிர்காலம்கேள்விக்குறியாகிவிடும்.
இத் திட்டத்தால் உண்டாகும் பாதிப்பு குறித்து கூறுபவர்களை எதிப்பாளர்கள் என்று கருதாமல், அவர்கள்கருத்திலும் நியாயம் இருக்கக் கூடும் எனக் கருதி நிதானமானப் போக்கை கையாண்டு நாட்டுக்கு நல்லது பயக்கும்முடிவை மத்திய கப்பல்துறை அமைச்சகம் எடுக்கும் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
திட்டக் கமிஷன் நிதி ஒதுக்கீடு:
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய திட்டக் கமிஷன் கூட்டத்தில் சேது சமுத்திரத்திட்டத்திற்கு மேலும் ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ரூ.2,000 கோடி செலவிலான இத் திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது. இப்போது திட்டக் கமிஷன் கூட்டத்தில் மேலும் ரூ.40 கோடி நிதிஒதுக்கப்பட்டுள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications