கோபால்: அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழு கேள்வி
டெல்லி:
நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது போடப்பட்டுள்ள பொடா வழக்குத் தொடர்பான சிலஆவணங்களை அவரிடம் காட்டக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது தொடர்பாக விளக்கம்கேட்டுள்ளது பொடா மறு ஆய்வுக் குழு.
அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், தமிழர் விடுதலைப் படையின் நோட்டீஸ்வைத்திருந்ததாகவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார் கோபால்.நீண்ட சிறை வாசத்துக்குப் பின் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
அவர் கைது செய்யப்பட்டது சரியா என்பது தொடர்பான விசாரணை பொடா மறு ஆய்வுக்குழுவின் முன் நடந்து வருகிறது. அவர் மீதான வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும்தங்களிடம் தாக்கல் செய்யுமாறு கடந்த வாரம் மறு ஆய்வுக் குழு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சில ஆவணங்கள் மிகுந்தமுக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அவற்றை கோபால் தரப்பிடம் காட்டக் கூடாது என்றுகூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று மறு ஆய்வுக் குழு மீண்டும் தனது விசாரணையை ஆரம்பித்தது. அப்போதுபேசிய குழுவின் தலைவரான நீதிபதி சகார்யா,
விசாரணையின்போது கிடைத்த ஆவணங்கள், சாட்சிகள் ஆகியவற்றை ஏன் கோபாலிடம் காட்டக்கூடாது என்பதற்கு தமிழக அரசு உரிய காரணத்தைச் சொல்ல வேண்டும்.
கோபாலிடம் காட்டக் கூடாது என்று நீங்கள் சொல்லும் ஆவணங்களில் கோபாலே கொடுத்தவாக்குமூலமும் அடங்கும். அவர் கொடுத்த வாக்குமூலத்தைக் கூட அவரிடம் காட்டக் கூடாது என்றுசொல்வது ஏன்?
தன் மீது ஏன் பொடா வழக்குப் போடப்பட்டது என்பதை அறிய குற்றம்சாட்டப்பட்டவருக்கு முழுஉரிமை உண்டு. இதனால், இந்த ஆவணங்களைப் பார்க்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது.
அவரிடம் காட்டக் கூடாது என்று சொல்வதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றார்.
அப்போது பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் மாத்தூர், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்வரை குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணைத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டியதில்லைஎன்றார்.
ஆனால், வழக்கை சந்திப்பவருக்கு அவருக்கு எதிரான அடிப்படையான ஆவணங்களைக் கூடகாட்டக் கூடாது என்று சொல்லும் தமிழக அரசு அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும் என்றுசகார்யா கூறினார்.
இதையடுத்து அதிகாரிகளுடன் கலந்து பேச அவகாசம் கேட்டார் மாத்தூர். இதைத் தொடர்ந்துவிசாரணையை நாளைக்கு சகார்யா ஒத்தி வைத்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications