போட்டா போட்டி வேண்டாம்: கருணாநிதி
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை யார் நிறைவேற்றியது என்பதில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேபோட்டா போட்டி, போஸ்டர் மோதல் வேண்டாம். அதை கூட்டணிக் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று திமுகதலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
150 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த சேது சமுத்திரத் திட்டம் தற்போது நனவாகியுள்ளது. இதையடுத்துஇந்தத் திட்டத்தை நிறைவேற்ற நாங்கள்தான் நடவடிக்கை எடுத்தோம் என்று திமுக கூட்டணியில் உள்ளகட்சிகளும், அதிமுக, பாஜக போன்ற கட்சிகளும் உரிமை கொண்டாட ஆரம்பித்துள்ளன.
அனைத்துக் கட்சிகளும் எங்கஹால்தான் திட்டம் வந்தது என்று சுவரொட்டிகளை ஒட்டி பெரும் போஸ்டர் போரில்குதித்துள்ளன. இந் நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநதி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சேது சமுத்திரத் திட்டத்தை ஒவ்வொரு கட்சியும், நாங்கள்தான் இதைக் கொண்டு வர பாடுபட்டோம் என்றுகூறுவதைப் பார்க்கும்போது, சேது சமுத்திரத் திட்டம் தமிழ் மக்களுக்கு உகந்த திட்டம் என்பதுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளாக பல்வேறு பெருமக்களால் இந்தத் திட்டம் குறித்து கோரப்பட்டு வந்தது. இருப்பினும் மத்தியில்தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தத் திட்டம் நிறைவேற முக்கியக் காரணம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த பொதுமக்கள்தான்.அவர்கள்தான் இந்தப் பெருமைக்கு உரியவர்கள்.
திமுகவினர் சிலர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், அதற்குத்துணையாக குறைந்த பட்ச பொதுத்திட்டம் தயாரித்த குழுவின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் நன்றிகூறும் சுவரொட்டிகளுடன் எனக்குத் தெரியாமல் தேவையில்லாமல் என்னையும் பாராட்டி சுவரொட்டிகள்ஒட்டியுள்ளார்கள்.
இது ஒரு கூட்டு முயற்சி. இந்தத் திட்டம் நிறைவேற தமிழக அரசின் ஒத்துழைப்பும் தேவை என்பதைஆரம்பத்திலேயே, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு,கூறியுள்ளதும் நினைவு கூறத்தக்கது.
இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்துத்தான் இத்திட்டத்திற்குத் தனிப்பட்ட யாரும் உரிமை கொண்டாடி விளம்பரம்தேடிக் கொள்ளத் தேவையில்லையென்று கருதியதின் விளைவாக கடந்த 7ம் தேதி கூடிய ஜனநாயமுற்போக்குக்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் நன்றிஅறிவிப்பு என்ற தலைப்பில்,
சேது சமுத்திரத் திட்டத்தினை செயல்படுத்த- சிறப்பு நிறுவனம் ஒன்று அமைத்திருப்பதற்கு குறைந்தபட்ச செயல் திட்டஅமலாக்கக் குழுத் தலைவர் சோனியா காந்தி-, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறோம்.
எனவே அனைத்துக் கட்சிகளுக்கும், குறிப்பாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளகட்சிகளைச் சேர்ந்தவர்களை நான் கேட்டுக் கொள்வது; சேது சமுத்திரத் திட்டத்திற்கு உரிமை கொண்டாடி போட்டாபோட்டி போஸ்டர் யுத்தத்தை தவிர்க்க வேண்டும். இதை ஒரு பிரச்சினையாக மாற்றி, வெற்றி முகட்டை நாம்எட்டுவதை தட்டி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications