2 மனைவி விவகாரம்: டி.ஆர்.பாலுவுக்கு எதிராக வழக்கு
சென்னை:
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என்று அறிவிக்கக்கோரி அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோற்ற வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டி.ஆர்.பாலு.இத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியுற்றவர் திருவான்மியூரைச் சேர்ந்த புருஷோத்தமன்.
இந் நிலையில் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது டி.ஆர்.பாலு கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தில், தனக்கு 2 மனைவிகள் இருப்பதாகதெரிவித்துள்ளார்.
ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது இன்னொரு திருமணம் செய்வது இந்து திருமணச் சட்டப்படி குற்றமாகும். ஆனால் தனக்கு 2மனைவிகள் இருப்பதாக பாலுவே ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே இந்து திருமணச் சட்டம் பிரிவு 17ன்படி பாலு குற்றம் இழைத்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 494, 495 ஆகிய பிரிவுகளின் கீழ்அவர் தண்டனைக்குரியவராகிறார்.
சட்டத்தை மீறுகிற யாரையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்ய முடியும். அந்த வகையில் சட்டத்தை மீறுகிற வகையில்நடந்து கொண்டுள்ள டி.ஆர்.பாலுவின் தேர்வை ரத்து செய்து, அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டி.ஆர்.பாலுவுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications