வைகோ, ராமதாஸ் பொய்யர்கள்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வந்ததே நான தான் என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் வைகோ, ராமதாஸ், கருணாநிதி மீது கடும் தாக்குதல்தொடுத்துள்ளார். அதன் விவரம்:

தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் நான் எடுத்து வரும் முயற்சிகளையும்நாடறியும். சேது சமுத்திரத் திட்டம் நான் இடையறாது எடுத்த முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி.

இந்த உண்மையை ஒப்புக் கொள்ள வைகோவுக்கும் ராமதாசுக்கும் மனமில்லை. வரலாற்றின வழித்தடம் தெரியாதவைகோவுக்கும் அடாவடி அரசியல் நடத்தும் ராமதாசுக்கும் உண்மைகளை எத்தனை தடவை எடுத்துச்சொன்னாலும் புரியப் போவது இல்லை.

சேது சமுத்திரத் திட்டத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இன்று வரை இடைவிடாது வலியுறுத்திவரும் ஒரே இயக்கம் அதிமுக தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் எடுத்த தளராத முயற்சிகளே இன்று சேதுசமுத்திரத் திட்டத்தை நனவாக்கியுள்ளது.

எம்.ஜி.ஆரின் வற்புறுத்தல் காரணமாக 1981ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி இத் திட்டம் தொடர்பாக ஒரு குழுஅமைக்கப்பட்டது. இதை வைகோவும் ராமதாசும் அறிவார்களா? இத் திட்டத்தை வலியுறுத்தி 1986ம் ஆண்டுதமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதும் எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான். இந்தச் செய்தியாவதுவைகோவுக்கும் ராமதாசுக்கும் தெரியுமா?

இத் திட்டத்துக்காக ஜெயலலிதா ஒரு முறையாவது வாதாடியது உண்டா என்று கேட்கிறார் வரலாறு அறியாதவைகோ. 1984ம் ஆண்டு மே 2, செப்டம்பர் 9ம் தேதிகளிலும், 1986ம் ஆண்டு மார்ச் 18ம் தேதியும் இத் திட்டத்தைவலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன்.

இத் திட்டம் பொருளாதாரரீதியாத சாத்தியமில்லாதது என்று அப்போதைய சட்ட அமைச்சர் குறிப்பிட்டதற்கு மறுப்புதெரிவித்து, ஆணித்தரமாக நான் மாநிலங்களவையில் பேசினேன்.

1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா ஒரு முறையாவது இத் திட்டம் குறித்துபிரதமரை சந்தித்து வலியுறுத்தினரா என்று மனம் போனபடி பேசியிருக்கிறார் வைகோ.

மக்கள் மத்தியில் ஒரு செய்தியை வைக்கும்போது அதைப் பற்றி முறையாக அறிந்து கொண்டு பேச வேண்டும் எனபால பாடம் கூட வைகோவுக்குத் தெரியவில்லை. 1991ம் ஆண்டில் நான் முதல்வரானவுடன் தமிழகத்தின்இன்றியமையாத திட்டங்கள் குறிதது அப்போதையய பிரதமர் நரசிம்மராவிடம் ஜூலை மாதத்தில் ஒரு மனுவைக்கொடுத்தேன்.

அதில் 8வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தைச் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.மேலும் இத் திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராயந்து அறிக்கை சமர்பிக்குமாறு பல்லவன் போக்குவரத்துக்கலந்தாய்வு நிறுவனத்துக்கு 1994ம் ஆண்டில் கட்டளையிட்டதும் நான் தான்.

எனது இந்த அரிய முயற்சியால் தான் 1996ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் இப்போது இத் திட்டத்தைஅமலாக்க புதிய திட்டமே உருவாக்கப்பட்டுள்ளது.

சுய நலக் கண்கொண்டே எதையும் பார்க்கும் ராமதாசுக்கும் வைகோவுக்கும் இதெல்லாம் கணணில் படாமல்போனது ஆச்சரியமில்லை.

சேது சமுத்திரத் திட்டத்துக்காக நான் எடுத்த முயற்சிகள் எத்தனை, எத்தனை.

1998ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த சில நாட்களில் உருவாக்கப்பட்ட செயல் திட்டத்தில்,எனது ஆணித்தரமான வலிமையான வாதங்களால் சேது சமுத்திரத் திட்டம் அமலாக்கப்படும் என்ற உறுதிமொழிதரப்பட்டது.

இது மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மைகளாய் வரலாற்றில் எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.இதையெல்லாம் மூடி மறைக்க வைகோ எவ்வளவு முயன்றாலும் அது மக்களிடம் எடுபடாது.

2001, 2002ம் ஆண்டுகளில் பிரதமராக இருந்த வாஜ்பாயை சந்தித்து சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.

இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் எடுத்த முயற்சிகள் பல. இத் திட்டத்துக்கு யாராவது சொந்தம்கொண்டாட முடியும் என்றால் அது நான் மட்டும் தான். இது தான் உண்மை. இது தான் வரலாறு. இதை மறைக்கமுயல்வது வரலாற்று மோசடி.

அடுத்தவரின் உழைப்பை தனது என்று சொல்லி வாழும் உழைப்புச் சுரண்டல்காரர்கள் இப்போது மட்டுமல்ல,அப்போதும் இருந்தார்கள். இதற்கு ஹூயுண்டாய் கார் நிறுவனம் நல்ல எடுத்துக் காட்டு.

1995-96ல் இந்தக் கார் நிறுவனம் தமிழகத்தில் அமைய அடித்தளம் அமைத்தது நான் தான். மூன்று முறை அந்நிறுவன அதிபர் கொரியாவில் இருந்து வந்து என்னைச் சந்தித்துப் பேசி திட்டத்தை இறுதி செய்தார்.

இதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த இந் நிலையில் சட்டமன்றத் தேர்தலும் பொதுத் தேர்தலும் வந்தன.தேர்தல் நடத்தை விதி காரணமாக ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட முடியவில்லை.

அந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்து கருணாநிதி அதிகாரத்துக்கு வந்தார். ஹூயுண்டாய் கார் நிறுவனத்தைரிப்பன் வெட்டித் திறந்துவிட்டு, இந்தத் தொழிற்சாலையே தன்னால் தான் வந்தது என்று பேசினார்.

அதே தான் இப்போது சேது சமுத்திரத் திட்ட விஷயத்திலும் நடக்கிறது.

இந்த உண்மைகள் பொய்யர்களை நிச்சயம் சுடும். உண்மை சுடத்தான் செய்யும்.

இவ்வாறு தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+