திமுக மாஜி அமைச்சருடன் ஜெயலட்சுமிக்கு தொடர்பு?

Subscribe to Oneindia Tamil

சிவகாசி:

Jayalakshmiஜெயலட்சுமிக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக இந்த வழக்கில்கைது செய்யப்பட்டுள்ள ஏட்டு கண்ணன் கூறியுள்ளார்.

திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த இளங்கோவனால் ஜெயலட்சுமிக்கு பாதுகாப்பு மற்றும் எடுபிடி வேலைக்குநியமிக்கப்பட்டிருந்தவர் ஏட்டையா கண்ணன். ஜெயலட்சுமி வீட்டுக்கு காய்கறி வாங்கி வருவது உள்ளிட்ட வேலைகள் பார்த்து வந்தார்.இளங்கோவன் இல்லாத நேரத்தில் ஜெயலட்சுமி மற்றவர்களுடன் வைத்திருந்த தொடர்பைக் காட்டி மிரட்டி அவரை அவ்வப்போது ருசிபார்த்து வந்திருக்கிறார். இதை ஜெயலட்சுமியே வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

மிரட்டியே தன்னை பலமுறை கண்ணன் கற்பழித்ததாக ஜெயலட்சுமி கூறியதையடுத்து, ஜெயலட்சுமிக்கு எய்ட்ஸ் உள்ளதாக பதிலுக்கு குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் கண்ணன்.

இந் நிலையில், ஜெயலட்சுமியை இளங்கோவனோடு சேர்ந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார் கண்ணன்.

அவர் சிவகாசி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜர் செய்யப்பட்டார். அப்போது அவரது சிறைக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டது.

Head constable Kannanநீதிமன்றத்திற்கு கண்ணன் அழைத்து வரப்பட்டபோது, அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் வேனில் இருந்தவாறே அவர் கூறியதாவது:

ஜெயலட்சுமிக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஜெயலட்சுமி எங்களைப் பற்றிக் கூறி வரும் அனைத்துத் தகவல்களும் பொய்யானவை. அவரது நாடகங்களை விரைவில் நாடறியும்என்றார் கண்ணன்.

இதற்கிடையே கண்ணனின் மகளது சடங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோ கேசட்டில் ஜெயலட்சுமிக்கு அவரது கண்ணனும், அவரதுவீட்டினரும் தரும் ராஜ மரியாதை பலரையும் கலங்கடிக்கிறதாம்.

இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, இளங்கோவனுக்கு வேண்டிய பெண் என்பதாலும், தானும் அவ்வப்போது ருசி பார்த்த பெண் என்பதாலும்ஜெயலட்சுமியை விழுந்து விழுந்து கண்ணன் கவனிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளனவாம்.

ஜெயலட்சுமி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+