ஜெ. சொத்து குவிப்பு: அரசு வழக்கறிஞர் நியமனம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக தேவராஜ் என்பவரைநியமிக்கப்படவிருக்கிறார்.

வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66.66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கை,வேறு மாநிலத்தில் விசாரிக்கவேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இதனையடுத்து இந்த வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு தொடர்பான ஆவணங்கள் நேற்று முன்தினம் வந்து சேர்ந்தன. இதனையடுத்து இப்போது விசாரணையைத்துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வழக்கை நீதிபதி பச்சாப்புரே விசாரிக்கிறார்.

இந் நிலையில் அரசு வழக்கறிஞராக தேவராஜ் நியமிக்கப்படவிருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.அவரது நியமனத்துக்கு அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்என்றும் கூறப்படுகிறது.

வழக்கு விசாரணையை நடத்துவதற்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. மேலும், தீர்ப்பு எழுதும் 2எழுத்தர்கள், தமிழ் மொழிபெயர்ப்பாளர், 3 குமாஸ்தாக்கள், 2 தட்டெழுத்தர்கள், 2 உதவியாளர்கள், ஒரு டிரைவர்ஆகியோரும் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+