ஐசிசி: துவக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி
சவுதாம்டன்:
ஐ.சி.சி. மினி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் கென்யாவை 98 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற கென்ய கேப்டன் ஸ்டீவ் டிக்கலோ இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இந்திய அணியில்ரோஹன் கவாஸ்கருக்குப் பதில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார்.
முதல் 5 ஓவர்களில் இந்தியா 7 ரன்களையே எடுத்தது. சேவக் வழக்கம்போல் பொறுப்பற்ற முறையில் ஆடிஒடயோவின் பந்தில் கிளீன் போல்டானார். பின்னர் கங்குலியுடன் ஜோடி சேர்ந்த லட்சுமண் நிதானமாக ரன்களைசேகரிக்கத் தொடங்கினார்.
மெதுவாக ஆட்டத்தைத் தொடக்கிய கங்குலி பின்பு அதிரடிக்கு மாறினார். இருப்பினும் 90 ரன்களை எட்டியநிலையில் அவுட்டானார். லட்சுமண்-கங்குலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்துவந்த யுவராஜ் சிங் 9 ரன்களுக்கு அவுட்டானார்.
சிறிது நேரத்தில், 8 பவுண்டரிகளுடன் 79 ரன்களுக்கு எடுத்திருந்த லட்சுமண் டிக்கலோ பந்துவீச்சில்ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கைப், டிராவிட் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி 10ஓவர்களில் இவர்கள் 90 ரன்களைக் குவித்தனர். இறுதியில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது.
கைப் 49 ரன்களுடனும், டிராவிட் 30 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
அடுத்து களமிறங்கிய கென்ய அணி மளமளவென தனது விக்கெட்களை இழந்தது. ஒட்டியானோ (0), கேப்டன்ஸ்டீவ் டிக்கலோ(2), ஹிதேஷ் மோடி (5), ரவிந்துஷா (33), ஒடயோ (15), ரகீப் (0) என அடுத்தடுத்துஅவுட்டானார்கள். அடுத்து வந்த அவ்மா கொஞ்சம் பொறுப்புடன் ஆடி அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 50 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து கென்யா தோல்வி அடைந்தது. இந்தியாதரப்பில் ஹர்பஜன் 3 விக்கெட்களையும், பதான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக கங்குலி தேர்வுசெய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் 2 ரன்கள் எடுத்தபோது, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் கங்குலிமூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். இவர் 216 போட்டிகளில் 9,789 ரன்கள் எடுத்துள்ளார். இப்பட்டியலில்சச்சின் 339 போட்டிகளில் 13, 415 ரன்கள் எடுத்து முதலாவது இடத்திலும், இன்சமாம் உல் ஹக் 320 போட்டிகளில்9, 977 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இலங்கையின் ஜெயசூர்யா 9,700 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
இத் தொடரில் வரும் 19ம் தேதி இந்தியா, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications