கருணாநிதி வீடு: முற்றுகையிடும் இந்து மக்கள் கட்சி
சென்னை:
கீதையை விமர்சித்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரை கோயம்புத்தூருக்குள்நுழைய விட மாட்டோம் என்றும் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் இந்துமக்கள் கட்சி கூறியுள்ளது.
அக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஸ்ரீதரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தொடர்ந்து இந்து மதத்தை விமர்சித்து வரும் கருணாநிதி பகவத் கீதையையும் மோசமாக விமர்சித்து இருக்கிறார்.இதற்கு அவர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் காவல் நிலையங்களிலும் புகார் கொடுப்போம்.
வருகிற 15ம் தேதி முப்பெரும் விழா நடத்த கோவைக்கு வரும் போது, ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்போம்.அதன்பின்னரும் மன்னிப்பு கேட்கா விட்டால் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கருணாநிதி வீட்டைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
வருகிற 26ம் தேதி கருணாநிதியின் மறுபக்கம் என்ற புத்தகம் வெளியிட உள்ளோம். அதில் கலந்து கொள்ளகருணாநிதிக்கு அழைப்பு அனுப்பப்படும்.
பிளாஸ்டர் ஆப் பாரீஸ் கலவையில் செய்யப்பட்ட சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் அவை நீர்நிலைகளில் கடலில் கரைக்கப்படும். இதை யாரும் தடுக்க முடியாது. தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பதைதடுக்க முடியாதவர்கள், விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது என்று சொல்வது குழப்பம் விளைவிப்பதற்காகும்என்று கூறினார்.












Click it and Unblock the Notifications