ஜெ.க்கு எப்போதும் நான் வில்லன்: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரையில் எப்போதும் நான் வில்லன் என்று மத்திய வர்த்தக மற்றும்தொழில்துறை இணை அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

தென்காசி அருகே ஆயக்குடியில் நடந்த காங்கிரஸ் கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டுஅவர் பேசியதாவது:

இங்கு பேசியவர்கள் என்னை ஜெயலலிதாவின் நெஞ்சம் நிறைந்த தலைவர் என்றனர். சிலர் ஜெயலலிதாவைஹீரோயின் என்றும் என்னை ஹீரோ என்றும் குறிப்பிட்டனர். ஜெயலலிதாவை பொறுத்தவரை அவருக்குஎப்போதும் நான் வில்லன் தான்.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, மதிமுகஎன அனைத்துக் கட்சிகளும் கூறிவருகின்றன. இவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு வகையில் இத் திட்டத்திற்காகமுயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் எந்த முயற்சியும் மேற்கொள்ளாத ஜெயலலிதா இதில் உரிமை கொண்டாடஎந்த தகுதியும் இல்லை.

கேரளத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வராக இருந்தஅந்தோணி ராஜினாமா செய்தார். அதே போல தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் தோல்விக்கு பொறுப்பேற்றுஜெயலலிதா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+