தண்ணீர்: ஆந்திர முதல்வருக்கு ஜெ. மீண்டும் கடிதம்
சென்னை:
சென்னையின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க கிருஷ்ணா நதியிலிருந்து 15 டிஎம்சி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம்எழுதியுள்ளார்.
ஏற்கனவே கிருஷ்ணா நதி நீர் கோரி ஜெயலலிதா அனுப்பிய கடிதத்துக்கு, தங்கள் அணைகளில் நீர் இல்லாததால்,நீர் தர இயலாது என ரெட்டி பதில் கடிதம் அனுப்பியிருந்தார். இந் நிலையில் ஜெயலலிதா இன்று மீண்டும் கடிதம்அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்தவிடக் கோரி கடந்த 2ம் தேதி ராஜசேகர ரெட்டிக்கு ஜெயலலிதாமுதல் கடிதம் எழுதினார். அக் கடிதத்திற்கு, தண்ணீர் திறந்துவிட முடியாத நிலையில் இருப்பதாக ராஜசேகர ரெட்டிபதில் எழுதினார்.
அதற்குப் பதில் தெரிவிக்கும் முகமாக ஜெயலலிதா எழுதிய கடிதத்தில்,
சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்க கிருஷ்ணா நதியிலிருந்து 15 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும்என்று 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி தமிழக, ஆந்திர அரசுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தம்கையெழுத்தாகி 20 ஆண்டுகள் கடந்த பின்னும் அதில் குறிபிடப்பட்ட அளவு தண்ணீர் தமிழகத்தை வந்துசேரவில்லை.
இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு இதுவரை ரூ.512 கோடியை ஆந்திர அரசுக்கு வழங்கியுள்ளது.
எனவே ஒப்பந்தத்தை மதித்து 15 டிஎம்சி தண்ணீரை கிருஷ்ண நதியிலிருந்து உடனடியாக திறந்து விட வேண்டும்என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications