கிரிக்கெட்: தென் ஆப்ரிக்கா அபார வெற்றி
பர்மிங்ஹாம் :
மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணி வங்காள தேசம் அணியை 9 விக்கெட்வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பெற்றது.
பி பிரிவில் இடம்பெற்றிருந்த தென் ஆப்ரிக்கா, வங்காள தேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காள தேசம்பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
தென் ஆப்ரிக்க வீரர் லாங்கிவெல்டின் வேகப் பந்து வீச்சில் வங்கதேசத்தின் முன்னணி வீரர்கள் மளமளவெனஅவுட்டானார்கள். ஓமர் 4 ரன்களிலும், அஷ்ரபுல் 4 ரன்களிலும், சலே ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாக ஒருகட்டத்தில் இந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. அடுத்து வந்த நாசிப்இக்பால் (40), காலித் மசூத் (24) இருவரும் ஓரளவு சுதாரித்து விளையாடினாலும், அவர்கள் அவுட் ஆன பின்புவந்த வீரர்கள் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆனார்கள்.
இறுதியில் வங்காள தேசம் 31.3 ஓவர்களில் 93 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தென் ஆப்ரிக்க தரப்பில்லாங்கிவெல்ட், நிட்டினி, போயே ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
அடுத்து விளையாட வந்த தென் ஆப்ரிக்க அணி 17.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து 9விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கிரேயம் 42 ரன்களுடனும், காலிஸ் 40 ரன்களுடனும்அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் மோதுகின்றன.
-
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications