கோவை திமுக அலுவலகம் மீது குண்டுவீச்சு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோவை மாவட்ட திமுக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சிலர் கெரசின் குண்டுகள் வீசித் தாக்குதல்நடத்தினர்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடில் மாவட்ட திமுக அலுவலகம் உள்ளது. அங்கு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் வந்து, கெரசின் பாட்டில் குண்டுகளை அலுவலகத்தின் மீது வீசி விட்டு தங்கள் வாகனங்களில்உடனடியாகத் தப்பினர்.

இந்தத் தாக்குதல் குறித்து அலுவலக ஊழியர் தண்டபாணி காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். சிதறிக் கிடந்த பாட்டில் துண்டுகளை சேகரித்தனர். 2 பீர்பாட்டில்கள் மற்றும் ஒரு குவாட்டர் பாட்டிலில் கெரசின் நிரப்பி, அதில் நெருப்பை பற்றி வீசியிருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி வரும் 15ல் கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்கிறார்.பகவத் கீதையை இழிவாகப் பேசிய கருணாநிதி கோவை வரும் போது, கறுப்புக் கொடி காட்டுவோம் என்று இந்துஇயக்கங்கள் அறிவித்துள்ள நிலையில், திமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கோவையில்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+