கர்நாடக அரசுடன் கன்னட திரையுலகம் இன்று பேச்சு
பெங்களூர்:
கன்னடம் அல்லாத பிற மொழித் திரைப்படங்களை 7 வாரங்கள் கழித்தே கர்நாடகத்தில் வெளியிட அரசு உத்தரவுபிறப்பிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக அரசுடன் இன்று கன்னடத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பேச்சுநடத்தவுள்ளனர்.
கர்நாடகத்தில் கன்னட மொழிப் படங்களுக்கு சுத்தமாக ஆதரவு இல்லை. தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிப் படங்கள்தான் அங்கே அதிகமாக (கன்னடர்களாலும்) விரும்பிப் பார்க்கப்படுகின்றன. இதன் காரணமாககன்னட மொழிப்படங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு சலுகையை அரசு அறிவித்துள்ளது.
இந் நிலையில் அழிந்து கொண்டிருக்கும் கன்னடத் திரையுலகைக் காப்பாற்றும் விதமாக, பிற மொழிப் படங்கள்அந்த மாநிலத்தில் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து 7 வாரங்கள் கழித்தே கர்நாடகத்தில் திரையிடப்பட வேண்டும்என்று கன்னடத் திரையுலகம் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரையுலகின் இந்த முடிவால்,திரையரங்குகளை மூட வேண்டிய நிலைதான் ஏற்படும் என்று கூறி அவர்கள் திரையரங்குகளை மூடிப் போராட்டம்நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோரின்ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் ரவிசந்திரன், அம்பரீஷ்,சிவராஜ்குமார், புனீத் ராஜ்குமார், ஜக்கேஷ், ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, நடிகை ஜெயந்தி உள்ளிட்ட பலரும்கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், 7 வாரத் தடை தொடர்பாக அரசின் அங்கீகாரத்தைப் பெறுவது எனவும்,அதிகாரப்பூர்வமாக அரசு மூலம் அறிவிப்பு வெளியிட வைப்பது எனவும், இதுதொடர்பாக இன்று கர்நாடகஅரசுடன் பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று கர்நாடக மாநில செய்தி, விளம்பத்துறை அதிகாரிகளுடன் கன்னடத் திரையுலகைச் சேர்ந்தபிரதிநிதிகள் பேச்சு நடத்தி 7 வாரத் தடை தொடர்பாக கோரிக்கை மனு கொடுக்கவுள்ளனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications