கும்பகோணம்: கைதானோரிடம் நீதிபதி விசாரணை

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நீதிபதி சம்பத் இன்றுவிசாரணை நடத்துகிறார்.

கிருஷ்ணா பள்ளியில் கடந்த ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட கொடூரமான தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாகஉடல் கருகி இறந்தனர். இந்த விபத்து தொடர்பாக முழு விசாரணை நடத்த நீதிபதி சம்பத் தலைமையிலானகமிஷனை தமிழக அரசு நியமித்தது.

இந்த விபத்து தொடர்பாக பள்ளி தாளாளர் பழனிச்சாமி, அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியைசாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, ஆயா வசந்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிமுத்துபழனிச்சாமி, முன்னாள் தாசில்தார் பரமசிவம், மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் பழனிச்சாமி, உதவி தொடக்க கல்வி அதிகாரி ராதாகிருஷ் ணன்,

சேலம் கட்டட பொறியாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர் மாதவன், உதவி கல்விஅதிகாரி பாலகிருஷ்ணன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பாலாஜி, நேர்முக உதவியாளர் துரைராஜ், அலுவலககண்காணிப்பாளர் தாண்டவன், உதவியாளர் சிவப்பிரகாசம் உள்பட மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டு திருச்சிமத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி சம்பத் கடந்த சில வாரங்களாக கும்பகோணத்தில் குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்கள், தீ விபத்தில்இருந்து தப்பிய குழந்தைகளிடம் விசாரணை நடத்தினார்.

இந்த தீ விபத்தின்போது குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சிக்காமல் பள்ளி ஆசிரியைகள் தப்பி சென்றதாக பலர்புகார் தெரிவித்தனர்.

இந் நிலையில் நீதிபதி சம்பத் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் இன்று கும்பகோணம் சென்று தீ விபத்து நடந்தபள்ளியை பார்வையிடுகிறார். பின்னர் தீ விபத்தில் 13 இழந்த நத்தம் கிராமத்திற்கு சென்று அங்குகட்டப்பட்டுவரும் புதிய பள்ளிக்கூடத்தை பார்வையிடுவதுடன், குழந்தைகளை இழந்த பெற்றோர்களிடம்விசாரணை நடத்துகிறார்.

இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட18 பேரிடம் நீதிபதி சம்பத் விசாரணை நடத்துகிறார். இதற்காக இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில்இருந்து தஞ்சாவூர் கொண்டு வரப்படுகிறார்கள். நாளையும் நீதிபதி சம்பத் விசாரணை நடத்துகிறார்.

இதற்கிடையே ஆசிரியைகளிடம் ஏற்கனவே 2 முறை விசாரணை நடத்தியுள்ள போலீசார், நேற்று 3வதுமுறையாகவும் விசாரணை மேற்கொண்டனர். இதற்காக பள்ளி ஆசிரியைகள் அனைவரும் காவல் நிலையத்திற்குவரவழைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+