கோட்டை முன் மறியல்: நல்லகண்ணு கைது
சென்னை:
விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க் கடன் வழங்கக்கோரி தலைமைச் செயலகம் முன்பு மறியலில் ஈடுபட்டஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு கைது செய்யப்பட்டார்.
சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை போர்க் கால அடிப்படையில்நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பயிர்க் கடன் வழங்க வேண்டும், விவசாயத்தொழிலாளர்களுக்கு வேலைக்கு உணவுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையில் இருந்து நல்லகண்ணு தலைமையில் ஊர்வலமாகசென்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் கோட்டை முன்பு கூடினார்கள். அங்கு கட்சியின் தேசிய செயலாளர் ராஜாபோராட்டத்தை தொடங்கி வைத்தார். அங்கு தடையை மீறி போராட்டம் செய்ய முயன்ற நல்லக்கண்ணு, துணைசெயலாளர் தியாகராஜன், பழனிசாமி எம்எல்ஏ உட்பட 1,000 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் காலியான குடங்களைக் கழுத்தில் கட்டியிருந்தனர். கைதான நல்லக்கண்ணு நிருபர்களிடம்பேசுகையில், எங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரியபோராட்டம் வெடிக்கும் என்று கூறினார்.
அதேபோல் கோவையில் மறியலில் ஈடுபட்ட சுப்பராயன் எம்.பி. உள்பட 850 பேரும், நெல்லையில் அப்பாத்துரைஎம்.பி. தலைமையில் 1,000 பேரும், தஞ்சையில் சிவபுண்ணியம் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம்நடத்தியவர்களும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கைதானார்கள்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications