• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேது சமுத்திரத் திட்டமும் ஸ்டாலினும்

By Staff
|

- ஏ.கே. கான்

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

சேது சமுத்திரத் திட்டத்தை அமலாக்க உருவாக்கப்படவுள்ள கழகத்தின் தலைவராக திமுக துணைப்பொதுச் செயலாளர் ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என சில வட இந்திய மற்றும் கேரளபத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் செய்திகளை திமுக வன்மையாக மறுத்துள்ளது.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், சில இந்தி நாளிதழ்கள் மற்றும் கேரளாவின் முன்னணிபத்திரிக்கையான மலையாள மனோரமா ஆகியவை இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.

சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த, ரூ. 2,000 கோடி முதலீட்டில் சேது சமுத்திரக் கழகம் என்றஅமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய கப்பல் போக்குவரத்துத்துறையின் அமைச்சராக உள்ள டி.ஆர். பாலுவின் நேரடிகண்காணிப்பில் இயங்கப் போகும் இந்த அமைப்பின் தலைவராக ஸ்டாலினை நியமிக்க திமுகதிட்டமிட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் மலையாள மனோரமா ஆகியவைதெரிவித்துள்ளன.

இதற்கு மறுப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் நிர்வாகஆசிரியருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,

நியாயமான முறையில் செய்திகளை வெளியிடுவதில் நான் அதிக மதிப்பும், மரியாதையும்கொண்டுள்ள ஒரு சில தினப் பத்திரிக்கைகளில் உங்கள் பத்திரிக்கையும் ஒன்று.

ஆனால், செப்டம்பர் 11ம் தேதி உங்கள் பத்திரிக்கையின் டெல்லி பதிப்பில் வெளியான ஒரு செய்திஅதிர்ச்சியை கொடுப்பதோடு, எதிர்பாராத ஒன்றாகவும் உள்ளது.

திமுகவின் அரசியல் ஆதாயம் தேடும் ஒரு மாபெரும் திட்டம் என்ற தலைப்பில் உங்கள்செய்தியாளரால் எழுதப்பட்டுள்ள அச் செய்தி அடிப்படையற்றது, தவறானது, இட்டுக்கட்டிஎழுதப்பட்டது. அதில் சிறிதளவும் உண்மையில்லை.

திமுகவை குறைத்து மதிப்பிடும் நோக்கத்தில் அச் செய்தி எழுதப்பட்டுள்ளது. இச் செய்திகீழ்த்தரமானது என்று கூறியுள்ள கருணாநிதி, அந்தச் செய்தியை எழுதிய சென்னை நிருபரின்பெயரையும் குறிப்பிட்டு, அவர் எப்போதுமே திமுகவுக்கு எதிராகவே எழுதக் கூடியவர் என்றும்கூறியுள்ளார்.

இந் நிலையில் மலையாள மனோரமா நாளிதழும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதே செய்தியைவெளியிட்டுள்ளது. ஸ்டாலினை சேது சமுத்திரக் கழகத்தின் தலைவராக்கி இத் திட்டத்தை திமுக வெகுவேகமாக நிறைவேற்ற முயல்வதாகக் கூறியுள்ளது.

இதையே மேலும் சில கேரள பத்திரிக்கைகளும் எதிரொலித்துள்ளன.

இது குறித்து திமுக தரப்பில் விசாரித்தபோது, கோபமான மறுப்பே பதிலாகக் கிடைத்தது.

துபாய் துறைமுகக் கழகத்தின் உதவியுடன் கொச்சியில் ஒரு கண்டெய்னர் டெர்மினலை உருவாக்கும்திட்டத்தை மத்திய அரசு வெகு நாட்களாக கிடப்பில் போட்டிருந்தது. இதற்கு சமீபத்தில் தான்அனுமதி கிடைத்தது.

கொச்சி வல்லார்பாடம் கண்டெய்னர் டெர்மினல் என்ற இந்த சரக்கு ஏற்றி, இறக்கும் துறைமுகம்அமைக்கப்பட்டால் கேரளாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

ஆனால், சேது சமுத்திரத் திட்டம் அமைந்து தூத்துக்குடி துறைமுகமும் விரிவாக்கப்பட்டுவிட்டால்,வல்லார்பாடம் டெர்மினலின் முக்கியத்துவம் முழுவதுமாகவே குறைந்துவிடும் என்று கேரளாகருதுகிறது.

இதனால் சேது சமுத்திரத் திட்டத்தை கேரளம் கவலையோடு தான் பார்க்கிறது.

இந்தக் கவலையையும் மலையாள நாளிதழில் வந்த செய்தியையும் முடிச்சு போடும் திமுகதலைவர்கள், சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மாநில அரசியலில் ஸ்டாலினுக்கு திமுக மிகுந்தமுக்கியத்துவம் தரவுள்ளது. இந்த நேரத்தில் அவரது தலையில் இவ்வளவு பெரிய திட்டத்தை தூக்கிவைக்க கருணாநிதி விரும்பமாட்டார்.

மேலும் அவ்வாறு ஸ்டாலினை நியமித்தால் தேசிய அளவிலும் மாநிலத்திலும் அரசியல்ரீதியில்தேவையில்லாத சர்ச்சைகளை சந்திக்க வேண்டி வரும். அதை கருணாநிதி நிச்சயம் விரும்ப மாட்டார்என்கின்றனர்.

விரும்பாத வரை திமுகவுக்கும் நல்லது. ஸ்டாலினுக்கும் நல்லது.

Write to editor

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X