கோபால்: அரசின் மனு தள்ளுபடி- உடனே அப்பீல்
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு பொடா வழக்கு ஆவணங்களை வழங்க வேண்டும் என்று மறு ஆய்வுக் குழுவிதித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்துவிட்டது.
பொடா சட்டத்தின் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார் கோபால். அவர் மீதான பொடா வழக்குஆவணங்களை 14ம் தேதிக்குள் (இன்று) அவரிடம் தமிழக அரசு வழங்க வேண்டும் என மறு ஆய்வுக் குழு நீதிபதிசஹார்யா உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், அதில் உள்ள சில ஆவணங்கள் மிக ரகசியமானவை என்றும், அதை கோபாலிடம் தர முடியாது என்றும்தமிழக அரசு கூறி வந்தது. அரசின் இந்த வாதத்தை பொடா மறு ஆய்வுக் குழு ஏற்கவில்லை.
இதையடுத்து, பொடா மறு ஆய்வுக் குழுவின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசின் சார்பில் உள்துறைச் செயலாளர் ஷீலாராணி சுங்கத் வழக்குத் தொடர்ந்தார். அதில்,
கோபால் வழக்கில் இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் அவரிடம்வழக்குத் தொடர்பான விசாரணை ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் இன்று வழங்கிய தீர்ப்பில்,
பொடா மறு ஆய்வுக் குழுவின் உத்தரவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம்ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்டது. இதனால் தமிழக அரசின் மனு மீது உயர் நீதிமன்றத்தால் எந்த உத்தரவும்பிறப்பிக்க முடியாது. இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று அறிவித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலேயே தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த அப்பீல் மனுமீதும் இன்றே விசாரணை நடக்கிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications