கோவையில் கருணாநிதி: மிக பலத்த பாதுகாப்பு
கோயம்புத்தூர்:
அண்ணா பிறந்த நாளையொட்டி கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா அக் கட்சித் தலைவர் கருணாநிதிதலைமையில் நடக்கிறது.
பகவத் கீதையைக் குறை சொன்ன கருணாநிதிக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக இந்து அமைப்புகள்மிரட்டியுள்ளதாலும், திமுக அலுவலகம் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாலும், கருணாநிதி வருகையையொட்டிகோவையில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மனைவி ராஜாத்தி அம்மாள், மத்திய அமைச்சர் ராஜா, திமுகமுதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் கோவை வந்த கருணாநிதிக்கு, ரயில் நிலையத்தில் கோவைமாவட்ட திமுக செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு கருணாநிதி மலர்த் தூவி மரியாதைசெலுத்தினார். அப்போது அவருக்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் பச்சைக் கொடி வரவேற்பு அளித்தனர்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த கருணாநிதி பீளமேட்டில் உள்ள சி.ஐ.டி.கல்லூரியில் நடந்த விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் தான் முப்பெரும் விழாவை நடத்துவோம். இந்த ஆண்டு வைகோநடைபயணமாக சென்று அண்ணா, பெரியார் பிறந்த நாள் விழாவாக நடத்துகிறார். அதே நாளில் திமுகவும்முப்பெரும் விழா நடத்தினால், ஒரு விழாவினால் இன்னொரு விழா பாதிப்படையும். எனவே குலுக்கல் மூலம்கோவை நகரைத் தேர்ந்தெடுத்து விழா நடத்த முடிவு செய்தோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ள கருத்துக்கு நானும்உடன்படுகிறேன். தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வரும் என நான் கருதவில்லை.
பாமகவின் ஆதரவு பெற்ற கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெற்றன என பாமக தலைவர் ஜி.கே.மணியும்,மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியும் கூறியிருப்பது அவர்களின் சொந்தக் கருத்து. எல்லாரும்கூட்டணி சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும்.
சிவனுக்கு நக்கீரன் சரியான தீர்ப்பு வழங்கினார். இப்போது நக்கீரன் கோபால் வழக்கில் உச்ச நீதிமன்றம்வழங்கியிருப்பது நியாயமான தீர்ப்பு என்றார் கருணாநிதி.
இன்று மாலை கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதிபேசுகிறார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications