மொத்தமாய் அறிவிக்கப்பட்ட தமிழக அரசு விருதுகள்
சென்னை:
கடந்த இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரியார், பாரதியார், அம்பேத்கர் விருதுகளை தமிழக அரசுமொத்தமாக இப்போது அறிவித்துள்ளது.
சமூக நலனுக்காகவும் சமுதாய சீர்திருத்ததுக்காகவும் பாடுபடுவோருக்கு பெரியார், அம்பேத்கர் விருதுகளையும்,தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோருக்கு திரு.வி.க, பாரதியார், பாரதிதாசன், கி.ஆ.பெ விருதுகளையும் தமிழகஅரசு வழங்கி வருகிறது.
ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இந்த விருதுகள் அறிவிக்கப்படவே இல்லை. 2002ம் ஆண்டுக்கான பெரியார்விருதுக்கு கா.ஜெகவீரபாண்டியனும், அம்பேத்கர் விருதுக்கு எம்.தாமோதரனும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவில்லை.
இந் நிலையில், 2002, 2003, 2004ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் மொத்தமாக இன்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது டெல்லியில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தவிருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
2002ம் ஆண்டுக்கான விருதுபெறுவோர்:
திரு.வி.க. விருது- தி.வே. கோபாலய்யர்
பாரதியார் விருது- கே.வி. கிருஷ்ணன்
பாரதிதாசன் விருது- ச.சு.ராமர் இளங்கோ
கி.ஆ.பெ. விருது- மு. தமிழ்க்குடிமகன் (முன்னாள் சபாநாயகர்)
2003ம் ஆண்டுக்கான விருதுபெறுவோர்:
பெரியார் விருது- துரை. கோவிந்தராஜன்
அம்பேத்கர் விருது- வி.சுப்புரத்தினம்
திரு.வி.க. விருது- ம.ரா.போ. குருசாமி
பாரதியார் விருது- ரா.அ.பத்மநாபன்
பாரதிதாசன் விருது-பேரா அ. தட்சிணாமூர்த்தி
கி.ஆ.பெ. விருது- ச.வே. சுப்பிரமணியன்
2004ம் ஆண்டுக்கான விருதுபெறுவோர்:
பெரியார் விருது- நீதிபதி வி. வேணுகோபால்
அம்பேத்கர் விருது- எ.சக்திதாசன்
திரு.வி.க. விருது- ச. அகத்தியலிங்கம்
பாரதியார் விருது- சீனி.விசுவநாதன்
பாரதிதாசன் விருது-பேரா வெ.ப.கரு. ராமநாதன்
கி.ஆ.பெ. விருது- பு.பா.ராஜராஜேஸ்வரி
இந்த விருதுகள் வழங்கும் விழா நாளை சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கவுள்ளது. பொதுப்பணித்துறைஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விருதுகளை வழங்குகிறார்.
நேற்று கோவையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பாரதிதாசன், பெரியார், அண்ணா விருதுகள்வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications