ஐசிசி கிரிக்கெட்: அரையிறுதியில் ஆஸ்திரேலியா
லண்டன்:
மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன் சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியா 7விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துடன் மோதியது. இரு அணிகளும் அமெரிக்கஅணியை வீழ்த்தி, தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்தன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணியேஅரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் செய்ய தீர்மானித்தது. பேட் செய்ய வந்த நியூசிலாந்து வீரர்கள் மெக்ராத்மற்றும் காஸ்ப்ரோவிச்சின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். ஆஷ்லே (18), மார்ஷல் (0),ஸ்டைரிஸ் (0) ஆகியோரை மெக்ராத் அவுட்டாக்க, காஸ்ப்ரோவிச் தன் பங்குக்கு பிளமிங் (29), ஓரம் (15),கெய்ர்ன்ஸ் (0) ஆகியோரை வெளியேற்றினார்.
மேக்மில்லன் 18 ரன்களில் ரன் அவுட் ஆக, நிதானமாக ஆடிய ஹாரிஸ் 26 ரன்களில் லீமேன் பந்தில்ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி தடுமாறி நின்றது. இந் நிலையில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடிசேர்ந்த மெக்கல்லம், வெட்டோரி இணை சிறப்பாக ஆடி 68 ரன்கள் சேர்த்து, நியூசிலாந்து அணிக்கு ஓரளவுகெளரவம் சேர்த்தது.
அதுவும் நெடுநேரம் நீடிக்கவில்லை. . மெக்கல்லம் 47 ரன்களில் கில்லஸ்பியிடம் பந்தில் ஆட்டமிழந்தார். 50வதுஓவர் முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. வெட்டோரி (29), மில்ஸ் (3)ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
199 ரன்கள் என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, முதல் ஓவரில் ஓரம் வீசிய பந்தில் தனதுஅதிரடி ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட் (4) விக்கெட்டை இழந்தது. இதையடுத்து வந்த கேப்டன் ரிக்கி பாண்டிங் 14ரன்களில் அவுட்டானார். 47 ரன்கள் எடுத்திருந்த ஹைடன், ஹாரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சைமண்ட்ஸ் அதிரஐ ஆட்டம் ஆடத் தொடங்கினார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த சைமண்ட்ஸ்47 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட 71 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.மறுமுனையில் மார்ட்டின் 60 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நியூசிலாந்து போட்டித் தொடரிலிருந்துவெளியேறியது.
இன்று நடக்கவிருக்கும் இலங்கை, இங்கிலாந்து இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன்ஆஸ்திரேலியா அரையிறுதியில் மோதும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications