பொடாவை நீடிக்க பிரதமரிடம் ஜெ. வலியுறுத்தல்
டெல்லி:
பொடா சட்டத்தை நீக்கக் கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
டெல்லியில் பிரதமரைச் சந்தித்த அவர், பொடா சட்ட நீக்கத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரினார். அத்துடன் பல்வேறு கோரிக்கைகள்அடங்கிய 66 பக்க மனுவையும் கொடுத்தார்.
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும், திருக்குறவை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும், காவிரி நடுவர் மன்றத்கைக்கலைக்க முயலும் கர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுக்க வேண்டும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,
தமிழகத்துக்கு ரூ. 1,680 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும், 5.4 லட்சம் டன் உணவு தானியம் வழங்க வேண்டும்,
கச்சத் தீவை மீட்க வேண்டும், தமிழகத்துக்கு கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்க வேண்டும் தமிழ் உள்ளிட்ட 18 தேசிய மொழிகளையும்மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 கோரிக்கைகள் அடங்கியிருந்தன.
மேலும் தமிழகத்தின் வறட்சி நிலை குறித்தும் பிரதமரிடம் விளக்கினார். அப்போது, வறட்சி நிலையை ஆராய விரைவில் ஒரு மத்தியக்குழுவை தமிழகத்துக்கு அனுப்புவதாக ஜெயலலிதாவிடம் பிரதமர் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது. மன்மோகன் சிங் பிரதமரான பின் அவரை முதல்வர் ஜெயலலிதா சந்திப்பது இதுவேமுதன்முறையாகும்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, மன்மோகன் சிங் மிகச் சிறந்த மனிதர். நேர்மைக்கு பெயர் போனவர். எனதுகோரிக்கைகளை பரிவுடன் கேட்டார். தமிழகத்தின் நிர்வாகம் மிகச் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினார் என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications