ஜெயலட்சுமி: சிபிஐ விசாரணைக்கு தடை வருமா?
மதுரை:
ஜெயலட்சுமி-போலீஸ் அதிகாரிகள் தொடர்பு குறித்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று கோரிதமிழக காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறை ஐஜி ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளையின்நீதிபதிகள் சதாசிவம், ராமலிங்கம் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது பேசிய அரசு வழக்கறிஞர் துரைசாமி, இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் முன் தலைமைச்செயலாளர் அல்லது டிஜிபியின் கருத்தையாவது நீதிமன்றம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படிச்செய்யப்படவில்லை.
மேலும் ஜெயலட்சுமியைக் காணவில்லை என்று தான் அவரது தந்தை ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.இதையடுத்து ஜெயலட்சுமியைக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்டோம். அந்த மனுவுக்கு பரிகாரம்தேடப்பட்டுவிட்டது.
இதுவரை ஜெயலட்சுமி போலீசாருக்கு எதிராக ஒரு புகார் கூட முறைப்படி தரவில்லை. ஜெயலட்சுமியின் சகோதரர்சீனிவாசன் தங்கள் குடும்பத்தினரை போலீசார் கடத்தியதாக புகார் கொடுத்தார்.
ஜெயலட்சுமியின் தந்தை தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தான்ஜெயலட்சுமி காவல்துறை அதிகாரிகள் மீது சரமாரியாக புகார் கூறினாரே தவிர, முறைப்படி எங்கும் புகார் தரவேஇல்லை.
ஆனாலும் அவரது சகோதரர் சீனிவாசன் கொடுத்த புகாரை வைத்து 24 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுவிட்டனர்.பலரை கைதும் செய்திருக்கிறோம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜெயலட்சுமியைக் காணவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட ஹேபியஸ்கார்பஸ் மனு மீது பல நாட்கள் விசாரணை நடத்தப்பட்டபோது வெளியான தகவல்கள், போலீசார் தொடர்புகளைவைத்துத் தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்றனர்.
மீண்டும் பேசிய அரசு வழக்கறிஞர், இந்த வழக்கில் போலீசாருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தவுடனேயேஅவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை தனது கடமையை சரியாக செய்து கொண்டுள்ளது.
ஹேபியஸ் கார்பஸ் மனு மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவார்கள் என்று நாங்கள் எதிர்பாக்கவே இல்லை.எங்கள் தரப்பு வாத்தைக் கூடக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தவறு என்றார்.
ஆனால், அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.
இதையடுத்து வழக்கை ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்குமாறு அரசு வழக்கறிஞர் துரைசாமி கேட்டுக்கொண்டதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய துரைசாமி, இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதியை சந்தித்துப் பேசவுள்ளேன்என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications