ரயில் நிலையம் சூறை: ரயிலுக்கு தீ வைக்க முயற்சி
சென்னை:
சென்னை அருகே திருநின்றவூரில் தாமதமாக வந்த காரணத்தால், மின்சார ரயிலுக்கு தீ வைக்க முயன்றவர்களைபோலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.
திருத்தணியிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் தாமதமாக வந்ததால், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.திருத்தணி - சென்னை கடற்கரை ரயில் சென்ட்ரல் வரை மட்டுமே இயக்கப்பட்டது. இந்த ரயிலை சென்னைகடற்கரை வரை இயக்கக் கோரி, திருநின்றவூர் பயணிகள் சிலர் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று முறையிட்டனர்.
அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால், சுமார் 200 பேர் ரயில்பாதையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போதுஅங்கு வந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து சிலர் ரயில் மீது கற்களை வீசினர். இதனால் பயந்த பயணிகள்ரயிலிலிருந்து வெளியே வந்தனர்.
வன்முறையாளர்கள் ரயில் நிலையத்திலிருந்த, ரயில்வே போக்குவரத்தைக் கண்காணிக்கும் அறை மற்றும் கேன்டீன்மீது கற்கள் வீசினர். குடிநீர்க் குழாய்களை உடைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்தது ஆவடி ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புக்குவிரைந்து வந்தனர்.
மறியல் மற்றும் கல்வீச்சில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் சிதறிஓடியவர்கள் ரயில் நிலையம் அருகே உள்ள கடைகள் மீது கற்களை வீசினர். அதனால் வியாபாரிகள் அவசரஅவரசமாக கடைகளை மூடினர்.
இதற்கிடையே மறியலை அடக்க வந்த இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளையும், ரயில்பாதையைப் பராமரிக்கஊழியர்கள் செல்லும் டிராலியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இரும்புச் சட்டங்களைஎடுத்து ரயில்பாதையில் போட்டு முட்டுக்கட்டை ஏற்படுத்த முயன்றனர். மேலும் ரயில் என்ஜின் அறையில் புகுந்துகண்ணாடிகளை உடைத்து, கருவிகளைச் சேதப்படுத்தினர். ரயிலுக்குத் தீ வைக்கவும் முற்பட்டனர்.
கலவரம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ரயில் நிலையம் நோக்கி வந்து போலீஸாருடன் இணைந்துவன்முறைக் கும்பலை விரட்டினர்.
இந்த ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அறை கடந்த வாரம்தான் திறக்கப்பட்டது.கல்வீச்சில் அதன் தகவல் தொடர்புக் கருவிகள், கண்ணாடிகளும், ஸ்டேஷன் மாஸ்டர் அறையின் கண்ணாடிகளும்சேதமடைந்தன.
கல்வீச்சில் டி.எஸ்.பி. முருகன் மற்றும் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். இந்தக் கலவரம் காரணமாகதிருவள்ளூர் - ஆவடி இடையே காலை 9 மணி முதல் 12.40 மணி வரை ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.
செங்கை கிழக்கு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சங்கர், ரயில்வே அதிகாரிகள் செல்வராஜ் ஆகியோர்கலவரம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இச் சம்பவம் தொடர்பாக 12 பேரைரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications