அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி: 22 பேர் பலி
புளோரிடா:
| அமெரிக்காவின் புளோரிடா, லூசியானா மாகணங்களை பயங்கர சூறாவளிப் புயல் தாக்கியதில் 22 பேர்பலியாகியுள்ளனர்.
ஹரிக்கேன் இவான் த ஈவில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி கடந்த 2 வாரங்களில் டோபாகோ,கேமேன் தீவுகள், டொமினிக்கன் ரிபப்ளிக், ஜமைக்கா, வெனிசுவேலா, கிரனடா ஆகிய நாடுகளைத் தாக்கிநூற்றுக்கும் மேற்பட்டவர்களை உயிர் பலி வாங்கிவிட்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைத்தாக்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பயங்கரமான சூறாவளி என்பதால், புளோரிடா, லூசியானாமாகாணங்களின் கடலோர நகர மக்களில் பெரும்பாலானவர்கள் இரு தினங்களுக்கு முன்பே வீடுகளைக் காலிசெய்துவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் பயங்கர காற்றுக்கும் கடும் மழைக்கும் இடையே பல பகுதிகள் ஆள் ஆராவாரமே இல்லாமல்காணப்பட்டன. |
இந் நிலையில் வியாழக்கிழமை இரவில், மணிக்கு 217 கி.மீ. வேகத்தில் புயல் புளோரிடாவுக்கும்லூசியானாவுக்கும் இடையே கரையைக் கடந்தது. அதனுடன் 12 டொர்னேடோக்களும் சேர்ந்து கொண்டு இப்பகுதியை தாக்கியதில் அமெரிக்காவின் தென் பகுதி கடலோரப் பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
வீடுகள் காற்றில் பறந்தன, மரங்களை சூறாவளி பிய்த்து எடுத்து எறிந்தது. பென்சகோலா உள்பட பல இடங்களில்பாலங்கள் கூட பயங்கர காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.அலபாமா, லூசியானா, மிசிசிபி ஆகிய பகுதிகள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
">புளோரிடாவை சமீபத்தில் தான் சார்லி, பிரான்சஸ் ஆகிய புயல்கள் தாக்கின. 6 வாரங்களில் மூன்றாவதுமுறையாகவும் இப்போது புயல் தாக்கியுள்ளது.
இதற்கிடையே, கரீபியன் தீவுகளுடன் கியூபாவும் சூறாவளியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்உடனடியாக உலக நாடுகள் பெருமளவில் உதவ முன் வர வேண்டும் என செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications