மத்திய அரசின் சாதனைகள்: காங். சைக்கிள் பேரணி
சென்னை:
மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் வரும் 25ம் தேதி முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை மாநிலம்முழுவதும் சைக்கிள் பேரணி நடத்த தமிழக காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் இப் பேரணி நடத்தப்படும். சென்னையில் நடக்கும் பேரணியில் நான்பங்கேற்கிறேன். இப் பேரணியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு கடந்த 100 நாள்களில்செய்த சாதனைகளை விளக்க உள்ளோம்.
தமிழ் மொழியை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தென் தமிழ்நாடு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி பெற உதவும் சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண, ரூ.1,000 கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்நிறைவேற்றப்பட உள்ளது. பொடா சட்டம், அரசியல்வாதிகள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன்பயன்படுத்தப்பட்டதால், ரத்து செய்யப்பட உள்ளது.
நெசவாளர்களின் துயரை நீக்கும் வகையில் சென்வாட் வரி நீக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில் திட்டங்களுக்குநடப்பாண்டில் ரூ.324 கோடி நிதி ஒதுக்கீடு, சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ரூ.200கோடியில் 4 மேம்பாலங்களுக்கு அனுமதி உள்ளிட்ட சாதனைகளை மத்திய அரசு செய்துள்ளது. இவற்றைமக்களிடம் தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications