அமெரிக்காவில் மன்மோகன்: புஷ்சுடன் சந்திப்பு
நியுயார்க்:
பிரதமர் மன்மோகன் சிங் தனது லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை அமெரிக்கா வந்துசேர்ந்தார்.
மன்ஹாட்டன் வால்ட்ரோப் அஸ்டோரியா ஹோட்டலில் சிங்குக்கு அதிபர் புஷ் சிற்றுண்டி விருந்தளித்தார்.அப்போது சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு தொழில்நுட்பம் தருவதைத் தடை செய்யும் உத்தரவைஅமெரிக்கா நீக்க முன் வந்துள்ளது. இது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.
தீவிரவாத ஒழிப்பு, இராக், காஷ்மீர், பாதுகாப்பு ஒப்பந்தம், ஆப்கானிஸ்தான் விவகாரம், கூட்டு ராணுவப் பயிற்சி,இலங்கை, நேபாளம், வங்கதேச விவகாரம் ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
ஒருவார காலம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் மன்மோகன் சிங், ஐக்கிய நாடுகள்சபையின் பொதுக் குழுவில் உரையாற்றவுள்ளார். அப்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம்வழங்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் வலியுறுத்துவார்.
மேலும் அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனங்களை நிறுவி நடத்தும் இந்தியர்களையும் சிங் சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாயுடன் பேச்சு நடத்துகிறார்.
வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாராபையும் சந்தித்துப் பேசவுள்ளார் மன்மோகன் சிங்.
மேலும் இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனியை உள்ளடக்கிய ஜி-4 கூட்டமைப்பு நாடுகளின்தலைவர்களுடனும் சிங் கலந்தாலோசிப்பார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications