செங்கல்பட்டு சட்டக்கல்லூரியை மாற்ற கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செங்கல்பட்டு சட்டக் கல்லூரியை சென்னைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட் டுள்ளது.

இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டில் கடந்த ஆண்டு புதிய சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த சட்டக் கல்லூரியில் மொத்தம் 240மாணவர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ரூ.17,000 கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் கல்லூரிக்கு சொந்தமான கட்டிடம் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சினிமா தியேட்டர் அருகேஉள்ள வணிக வளாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வாடகைக்கு இந்த சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது.

கல்லூரி அருகே மதுபானக் கடையும் உள்ளது. இப்படி அமைதியற்ற இடத்தில் இந்த சட்டக் கல்லூரி உள்ளது.போதிய கழிப்பிட வசதியும், குடிநீர் வசதியும் கல்லூரிக்கு இல்லை. மேலும் கல்லூரிக்கு முதல்வர் இல்லை. 3ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் இல்லை. கணிப்பொறி வசதி இல்லை. குறுகலான படியில்தான் ஏறி செல்லவேண்டியுள்ளது. வசதியை செய்து தரவேண்டும் என்று கூறினால் கல்லூரி நிர்வாகம் அந்த மாணவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கிறது.

எனவே, செங்கல்பட்டில் இருக்கும் சட்டக் கல்லூரியை சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டபல்கலைக்கழகத்திற்கு மாற்றவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த சட்டக் கல்லூரியை எந்த இடத்திற்கு மாற்றுவது என்பது வரும்27ம் தேதிக்குள் கண்டறிய முடியும் என்று கூறியதால் நீதிபதி தினகர், நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர்விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+