ஐசிசி கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வெளியேற்றம்
பர்மிங்காம்:
மினி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில்இங்கிலாந்திடம் தோற்று போட்டித் தொடரில் இருந்து வெளியேறியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டத்தின் 8வது ஓவரில்ஹார்மிசன் பந்துவீச்சில் ஹைடன் (17 ரன்கள்) கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் காப் பந்து வீச்சில்கில்கிறிஸ்ட் ஆட்டமிழந்தார். இவர் 50 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார்.
பின்னர் வந்த பாண்டிங் கைல்ஸ் வீசிய பந்தில் கேட்ச் அவுட்டானார். பின்னர் லேமன், மார்ட்டின் ஜோடிநான்காவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர். ஆனால் லேமன் 38 ரன்கள் எடுத்த போது வான் பந்துவீச்சில்க்ளீன் போல்டானார். அடுத்து வந்த சைமண்ட்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டானார். மறுமுனையில்நிலைத்து நின்று ஆடிய மார்ட்டின் 91 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து, வான் பந்துவீச்சில் அவுட்டானார்.
கடைசி நேரத்தில் மைக்கேல் கிளார்க் அதிரடி ஆட்டம் ஆடி, 34 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார். பின்னர்அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய 50 ஓவரின் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது.இங்கிலாந்து தரப்பில் காப் 3, வான் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
260 என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, தொடக்கத்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தது. சோலங்கி 7ரன்களுக்கு கில்லஸ்பி பந்தில் அவுட்டானார். ஆனால் டிரஸ்கோதிக், கேப்டன் மைக்கேல் வானுடன் இணைந்துஆஸ்திரேலியாவின் இறுதிப்போட்டி கனவை தகர்த்தார். எந்த பதற்றமும் இன்றி ரன்களை விரைவாகக் குவித்தனர்.
மெக்ராத், பிரெட் லீ, கில்லெஸ்பி, காஸ்ப்ரோவிச் என அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியும்இவர்களைப் பிரிக்க ரிக்கி பாண்டிங்கால் முடியவில்லை. டிரஸ்கோதிக் மெக்ராத்தின் ஒரே ஓவரில் 4பவுண்டரிகளை விளாசினார். இவர் 81 ரன்கள் எடுத்திருந்தபோது சைமண்ட்ஸ் பந்தில் போல்டானார்.
மறுமுனையில் சிறப்பாக பேட் செய்த வான் ஒரு நாள் கிரிக்கெட்டில் 9வது அரை சதத்தை அடித்தார். தொடர்ந்துசிறப்பாக ஆடிய வான் 86 ரன்களுக்கு அவுட்டானார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர்இதுவாகும்.
இவர்கள் அவுட்டானாலும் ஸ்டிராஸ் அதிரடியாக ஆடி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இறுதியில்இங்கிலாந்து 46.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டிராஸ் 52, காலிங்வுட் 6ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக மைக்கேல் வான் தேர்வு செய்யப்பட்டார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications