சென்னை ஹோட்டல்களில் ஆபாச நடனத்துக்கு தடை
சென்னை:
ஈவ் டீஸிங்கில் பெண் என்ஜீனியர் ஒருவர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக சென்னை நகரில் உள்ளஹோட்டல்களில் ஆபாச நடனம் ஆடுவதற்கு காவல் துறை ஆணையர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தரமணி டைடல் பார்க்கில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்தவர்ஸ்டெப்னா (25). இவர் கடந்த சனிக்கிழமை இரவு மைலாப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடனம்ஆடிவிட்டு, ஸ்கூட்டரில் சென்றபோது 4 இளைஞர்கள் காரில் விரட்டிச் சென்று ஈவ்டீஸிங் செய்தனர். அப்போதுகார் ஸ்கூட்டரில் மோதி ஸ்டெப்னா பலியானார்.
இந் நிலையில் சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கலாசார நடன நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாசநடனம் ஆட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் மீறும் ஹோட்டல் நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கவும் காவல் துறை ஆணையர் நடராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கைதான 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி:
இந் நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா (24), வெங்கடேஷ் (21), நெஸ்லின்(19), டன்வர் (16)ஆகிய 4 பேரின் ஜாமீன் மனுக்களை சைதாப் பேட்டை 4-வது மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து 4 பேரும் சென்னை செசன்சு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுஇன்று முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
கொலை வழக்காக மாற்றம்:
இதற்கிடையே கைதான 4 பேர் மீதும் கூடுதலாக கொலை வழக்கு உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்தல் (302), பெண்ணை அவமானப்படுத்தி ஈவ்டீஸிங் செய்தல்(354), பெண்ணை மிரட்டுதல் (509), மானபங்கப்படுத்தி சித்ரவதை செய்தல் (4 ஏ (2) (ஐ)) ஆகிய பிரிவுகள்கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications