ஜெயலட்சுமி: ராஜசேகர் முன்ஜாமீன் மனு வாபஸ்
மதுரை :
ஜெயலட்சுமியை திருமணம் செய்ததாகக் கூறப்படும் டி.எஸ்.பி. ராஜசேகரின் முன்ஜாமீன் மனுவை அவரது வழக்கறிஞர் வாபஸ்பெற்றார்.
ராஜசேகர், ஜெயலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டதையறிந்து, அவரின் முதல் மனைவி விசாலாட்சி கடந்த 2001ம் ஆண்டுஅக்டோபர் 26ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சொந்தக் காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகஅந்த வழக்கு முடிக்கப்பட்டது.
இப்போது ஜெயலட்சுமி விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில், ராஜசேகரின் மனைவி தற்கொலை வழக்கு மீண்டும்விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் தர வேண்டும் என்று ராஜசேகர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
நான் நேர்மையாக பணிபுரிந்தற்காக பல பதக்கங்களை வாங்கியவன். மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த எனதுமைத்துனர் ஒருவர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார். இன்னொரு மைத்துனர் மனநிலை பாதிக்கப்பட்டு, எங்கு இருக்கிறார்என்று தெரியவில்லை. இப்படி எனது மனைவி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பலவீனமான மனது உள்ளவர்கள்.
எனவே எனது மனைவியின் தற்கொலைக்கு நான் காரணம் அல்ல. ஜெயலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியவை எல்லாம்பொய். எனவே எனக்கு முன்ஜாமீன் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ராஜசேகர் சார்பில் ஆஜாரான வழக்கறிஞர் வீரக்கதிரவன், சில ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட வழக்கையாரோ ஒரு பெண் கூறிய குற்றச்சாட்டை அடுத்து மீண்டும் விசாரிக்கிறார்கள். ஜெயலட்சுமி சுய விளம்பரத்திற்காக அவ்வாறுபேசுகிறார். ஜெயலட்சுமி கூறியவை பொய். அவருக்கும் ராஜசேகருக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி தணிகாசலம், ஜெயலட்சுமி கூறியவற்றில் உண்மை இல்லையென்றால் நஷ்ட ஈடு வழக்குதொடரலாமே. வழக்கு மறுபடியும் விசாரிக்கப்படுகிறது என்றால் அதில் ஏதோ மர்மம் இருக்கிறது. ஜெயலட்சுமி கூறுவதுபொய் என்றால், கடற்கரையில் ஒன்றாக படம் எடுத்துக் கொண்டது பொய்யா? அவை தயார் செய்யப்பட்ட படங்களா?இதெல்லாம் வேறு வழக்கில் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்றாலும், ஜெயலட்சுமிக்கும் ராஜசேகருக்கும் தொடர்புஇல்லை என்று கூற முடியுமா என்று கேட்டார்.
பின்பு ராஜசேகருக்கு முன் ஜாமீன் கொடுப்பது குறித்த முடிவை நீதிபதி அறிவிக்கும் முன்பு, மனுவை வாபஸ் பெறுவதாக வழக்கறிஞர்வீரக்கதிரவன் கூறினார். இதையடுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications