ஜெ. எது வேண்டுமானாலும் பேசுவார்: கருணாநிதி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா எது வேண்டுமானாலும் பேசுவார் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை என்று ஜெயலலிதா கூறி உள்ளார்.சோனியாவுக்கு பதிபக்தி கிடையாது என்று கூறியது பொதுவான விமர்சனமா? அது பொதுவான விமர்சனம்என்றால் தமிழக மக்கள் யாருக்கும் பதிபக்தி கிடையாது என்று சொன்னதாகத் தான் அர்த்தம்.
ஒவ்வொரு மேடையிலும் சோனியாவை அரைவேக்காடு, வெளிநாட்டுக்காரி, பதிபக்தி இல்லாதவர் என்றுஜெயலலிதா பேசியது உண்டா? இல்லையா?
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை புறக்கணிக்கும் வகையில் தமிழக அரசு விழாக்கள்நடத்தப்படுகின்றன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் பெயர்கள் கூட அரசு விழாவில்புறக்கணிக்கப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா முன்னுக்குப் பின் முரணாக எதுவேண்டுமானலும் பேசுவார்.
திமுக, -காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படுத்த திட்டமிட்டு பிரசாரம் நடத்தப்படுகிறது. அதில் அவர்கள்வெற்றிபெற முடியாது.
கடந்த ஆட்சியில் வாஜ்பாயிடமும் அத்வானியிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் கூட பொடா திரும்பபெறப்படவில்லை. அதேபோல தமிழை செம்மொழி ஆக்கவும், சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றவும்முன்வரவில்லை. ஆனால் இப்போதைய அரசு பதவியேற்ற 100 நாட்களில் இது போன்ற கோரிக்கைகள்நிறைவேறி இருக்கின்றன.
பொடா தொடர்பான பழைய வழக்குகளை வாபஸ் பெற தமிழக ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில்வலியுறுத்துவோம். தமிழ் உள்பட அட்டவணை மொழிகளை மத்திய ஆட்சி மொழியாக்கும் முயற்சியில்ஈடுபடுவோம் என்று கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications